Monday, August 13, 2012

இலக்கியத்தில் நகைச்சுவை - வால் எங்கே, வயிறு எங்கே ?


இலக்கியத்தில் நகைச்சுவை - வால் எங்கே, வயிறு எங்கே ?


கவி என்ற தமிழ் சொல்லுக்கு கவிஞர் என்றும், குரங்கு என்றும் இரண்டு அர்த்தம் உண்டு.

ராயர் சபையில் சில பேர் தங்களை "கவிகள்" என்று சொல்லிக் கொண்டு திரிந்தனர். அவர்களை பார்த்து காளமேகப் புலவர் கேட்கிறார் 

"நீங்கள் கவிகள் என்றால், உங்கள் வால் எங்கே, நீண்ட வயிறு எங்கே, முன்னால் இருக்கும் இரண்டு கால்கள் எங்கே, குழிந்த கண்கள் எங்கே..." என்று  கிண்டலாகக் கேட்கிறார்...



வால் எங்கே? நீண்ட வயிறு எங்கே? முன் இரண்டு
கால் எங்கே? உள்குழிந்த கண் எங்கே? சாலப்
புவிராயர் போற்றும் புலவீர்காள் நீவிர்
கவிராயர் என்று இருந்தக்கால்

1 comment:

  1. நான் உங்களிடம் ச்லேடைப்பாடல்கள், நகைசுவைப்படல்கள் எழுத சொல்லவேண்டும் என்று நினைத்தேன். நன்றி

    ReplyDelete