கந்தரனுபூதி - முருகன் கழல் பெற்று உய்வாய்
(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்)
மனம் அலைபாயும் தன்மை உடையது. ஒரு இடத்தில் இருக்காது. குரங்கு போல் தாவிக் கொண்டே இருக்கும். மனதை ஒரு முகப் படுத்தாவிட்டால் எதையும் செய்ய முடியாது. ஒன்றைச் செய்யும் போதே வேறு சிந்தனை வந்தால் எதைச் செய்வது?
சாப்பிடும்போது அலுவலகச் சிந்தனை, அலுவலகத்தில் இருக்கும் போது வீட்டு நினைப்பு, பிள்ளைகளை, மனைவியை கொஞ்சும்போது கூட மனம் வேறு எங்கோ போய்க் கொண்டிருக்கிறது. எதிலும் ஒரு முழு அனுபவம் கிடைப்பது இல்லை.
வாழ்வில் ஏதோ ஒரு அதிருப்தி இருந்து கொண்டே இருக்கிறது. ஏதோ பறி கொடுத்த மாதிரி, ஒரு வெறுமை வருகிறது. காரணம், எதிலும் முழு மனத்தோடு ஈடு படுவது கிடையாது.
புலன்கள் மனதை இழுத்துக் கொண்டு ஓடுகின்றன. வண்டியில் பூட்டிய குதிரைகள் ஆளுக்கு ஒரு பக்கம் இழுத்துக் கொண்டு ஓடுகின்றன. வண்டி எந்த ஊர் போய்ச் சேரும்?
அப்படியெல்லாம் இல்லை. என் புலன்கள் என் வசம் இருக்கின்றன. அப்படி என்ன பெரிய தவறு செய்து விட்டேன் என்று நீங்கள் கேட்கலாம்.
எங்கே , முயன்று பாருங்கள், இன்று ஒரு நாள் Whatsapp பார்க்காமல் இருப்பேன் என்று. ஒரு நாள் என்ன ஒரு நாள். ஒரு மணி நேரம் இருக்க முடியாது. காரணம், மனம் இழுத்துக் கொண்டு ஓடுகிறது. என்னமோ வந்திருக்கும், யார் என்ன சொல்கிறார்கள் என்று பார் என்று நம்மை பிடித்து இழுத்துக் கொண்டு போகிறது.
ஒரு நாளில் எவ்வளவு மணி நேரம் WA, யூ டியூப், instagram, serial, என்று மனதை அலைய விடுகிறோம். அந்த நேரத்தை எல்லாம் உருப்படியாக செலவழித்து இருந்தால் என்னென்ன சாதித்து இருக்கலாம்?
மனம் ஏன் அலை பாய்கிறது? அதை எப்படி கட்டுப் படுத்துவது என்று இங்கே அருணகிரிநாதர் சொல்கிறார்.
பாடல்
கைவாய் கதிர்வேல் முருகன் கழல் பெற்று
உய்வாய் மனமே ஒழிவாய் ஒழிவாய்
மெய்வாய் விழி நாசியொடுஞ் செவியாம்
ஐவாய் வழி செல்லும் அவாவினையே
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_14.html
(pl click the above link to continue reading)
கைவாய் = திருக்கையில்
கதிர்வேல் = ஒளிக் கதிர் வீசும் வேலை
முருகன் = கொண்ட முருகனின்
கழல் பெற்று = திருவடிகளை பெற்று
உய்வாய் = கடைந்தேறுவாய்
மனமே = என் மனமே
ஒழிவாய் ஒழிவாய் = விடுவாய், விடுவாய்
மெய் = உடல்
வாய் = வாய், நாக்கு
விழி = கண்
நாசியொடுஞ் = மூக்கோடு
செவியாம் = செவி என்ற
ஐவாய் = ஐந்து வாசல்
வழி செல்லும் = வழியாகச் செல்லும்
அவாவினையே = ஆசைகளை
உய்வாய், உய்வாய் என்று இரண்டு தரம் ஏன் கூறினார்?
மெய், வாய், விழி, நாசி, கண் என்று ஐந்து புலன்கள் வழியாக நமக்கு ஆசைகள் தோன்றுகின்றன.
சரி. அது நல்லது தானே. வாழ்க்கை அனுபவிக்கத் தானே. புலன்கள் வழி செல்லும் ஆசை தவறு என்றால் குருடாகவோ, செவிடாகவோ இருப்பது நல்லதா? எதை வாயில் போட்டாலும் ருசியே தெரியல என்றால் அது நல்லதா?
புலன்களின் வேலையே நமக்கு அனுபவத்தைத் தருவது தானே? அதை எப்படி நிறுத்துவது?
புலன்கள் அல்ல பிரச்சனை. புலன்கள், வெளி உலகில் இருந்து வரும் செய்திகளை உள்ளே அனுப்புகின்றன.
கண் அல்ல அனுபவிப்பது. மனம் தான் அனுபவிக்கிறது. கண் சரியாகத் தெரியவில்லை என்றால் கண்ணாடி போட்டுக் கொள்கிறோம். கண்ணாடியா பார்க்கிறது? நம் கண்ணும் அந்தக் கண்ணாடி போலத்தான். அதற்கு என்று ஒரு அனுபவம் கிடையாது.
அனுபவம் நிகழ்வது மனதில். ஆசை பிறப்பது மனதில்.
ஆனால், மனம் தானே உலகை அறிய முடியாது. புலன்கள் அந்த செய்திகளை அனுப்பினால் தான், மனம் அனுபவிவ்கும், நல்லது, கெட்டது என்று அறியும், மேலும் வேண்டும், அல்லது இது வேண்டாம் என்று தள்ளும்.
எனவே, மனமும், புலன்களும் ஒன்று சேர்ந்தால்தான் அனுபவம் நிகழ முடியும்.
எனவே இரண்டையும் ஒரு கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.
எனவே ஒழிவாய், ஒழிவாய் என்றார்.
முதலில் புலன்கள் செல்வதை தடுக்க வேண்டும். பின் மனம் செல்வதை தடுக்க வேண்டும்.
சரி, எப்படி தடுப்பது?
[
மெய்யியல் - பகுதி 1
https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html
மெய்யியல் - பகுதி 2
https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html
மெய்யியல் - பகுதி 3
https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html
மெய்யியல் - பகுதி 4
https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html
மெய்யியல் - பகுதி 5
https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html
மெய்யியல் - பகுதி 6
https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html
மெய்யியல் - பகுதி 7
https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html
நின்று தயங்குவதே
https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html
வள்ளி பதம் பணியும்
https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html
விடுவாய் வினையா வையுமே
https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html
மெய்ப் பொருள் பேசியவா
https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html
பரிசென் றொழிவேன்
https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_7.html
எதிரப் படுவாய்
https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_26.html
மெய்ப் பொருள் பேசியவா
https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_11.html
அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ
https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_8.html
]
No comments:
Post a Comment