இராமானுஜர் நூற்றந்தாதி - மனமே ஒத்துக் கொள்
நல்லது என்று தெரிந்தாலும் இந்த மனம் அதை விட்டு விட்டு மற்றவற்றின் பின் செல்கிறது. சொன்னால் எங்கே கேட்கிறது. கேட்டாலும் ஒரு கணம் கேட்க்கும் அடுத்த கணம் குரங்கு போல் வேறொன்றுக்குத் தாவி விடும். எனவே, ஏ மனமே, நான் சொல்வதை கேளு, திருவரங்கத்து அமூதனார் பாடிய இராமானுஜர் நூற்றந்தாதியை ஒழுங்காகப் படி என்று வேண்டுகிறார் வேதப் பிரகாசர்.
பாடல்
நயந்தரு பேரின்பம் எல்லாம் பழுதென்று நண்ணினர் பால்
சயந்தரு கீர்த்தி இராமாநுசமுனி தாளிணை மேல்
உயர்ந்த குணத்துத் திருவரங்கத்தமுது ஓங்கும் அன்பால்
இயம்பும் கலித்துறை அந்தாதி ஓத இசை நெஞ்சமே!
பொருள்.....
நயந்தரு = நன்மைகளை தரும்
பேரின்பம் எல்லாம் = பேரின்பம் எல்லாம்
பழுதென்று = நல்லது அல்ல என்று
நண்ணினர் பால் = இருப்பவர்களின் பக்கம்
சயந்தரு = வெற்றியயை தரும்
கீர்த்தி = புகழ் கொண்ட
இராமாநுச = இராமனுஜ
முனி = பெரியோனின்
தாளிணை மேல் = இரண்டு திருவடிகளின் மேல்
உயர்ந்த குணத்துத் = உயர்ந்த குணங்களை உடைய
திருவரங்கத்தமுது = திருவரங்கத்து அமுது (அமுதனார்)
ஓங்கும் அன்பால் = சிறந்த அன்பால்
இயம்பும் = கூறும்
கலித்துறை = கட்டளை கலித்துறை
அந்தாதி = அந்தாதி
ஓத = ஓதுவதற்கு
இசை நெஞ்சமே! = ஒத்துக்கொள் என் நெஞ்சமே
"நயந்தரு பேரின்பம் எல்லாம் பழுதென்று" அது எப்படி பேரின்பம் எல்லாம் பழுது ஆகும் ? பேரின்பம் வேண்டும் என்றுதானே எல்லோரும் விரும்புகிறார்கள் ? பேரின்பத்தையும் பழுது என்றால் வேறு என்ன தான் செய்வது ? குழப்பமாக இருக்கிறது அல்லவா ?
இந்த ஒரு வரிக்கு நிறைய வியக்கியானம் எழுதி இருக்கிறார்கள்....அவற்றை பின் வரும் ப்ளாக் களில் தொகுத்துத் தருகிறேன்....
"நயந்தரு பேரின்பம்-நல்லதை தருமென்று உலகோர் கலங்கி அனுபவிக்கும் சிற்றின்பம்.Waiting to read the viyakyanam.Nice introduction.Thanks.
ReplyDelete