இராமானுஜர் நூற்றந்தாதி - அடியார்க்கு அடியார்
இந்த மனம் இருக்கிறதே, இது ஒரு விசித்தரமான ஒன்று.
நம்முடைய மனம் தான். இருந்தும் நாம் சொல்வதை கேட்பது இல்லை.
பார்க்காதே என்றால் பார்க்கும். தொடாதே என்றால் தொடும். இருப்பதை விட்டு விட்டு இல்லாததற்குப் பறக்கும்.
மனதை அடக்க வேண்டும் என்று நினைத்தால், அது நம்மை அடக்க முயற்சி செய்கிறது.
மனம் நம்மை நல்ல வழியிலும் இழுத்துச் செல்லும், கெட்ட வழியிலும் இழுத்துச் செல்லலாம்.
மனதை வலு கட்டாயாமாக ஒரு வழியில் செலுத்தினால், நிச்சயம் அது நம் கட்டுபாட்டை மீறி எதிர் திசையில் ஓடும்.
அதை, அதன் வழியில் போய், கொஞ்சம் கொஞ்சமாக நம் வழிக்கு கொண்டு வர வேண்டும்.
அமுதனார் சொல்கிறார்,
என் மனமே, உன்னை நான் அடி பணிகிறேன். கெட்ட பசங்க சவகாசத்தை விடுத்து, இராமானுஜரின் மேல் அன்பு செய்யும் நல்லவர்களின் திருவடிக்கீழ் என்னை கொண்டு சேர்த்ததற்கு
பாடல்
பேரியல் நெஞ்சே ! அடிபணிந்தேனுன்னைப், பேய்ப்பிறவிப்
பூரியரோடுள்ள சுற்றம் புலர்த்திப், பொருவருஞ்சீர்
ஆரியன் செம்மை இராமானுச முனிக்கன்பு செய்யும்
சீரியபேறுடையார், அடிக்கீழென்னைச் சேர்த்ததற்கே.
பொருள்
பேரியல் நெஞ்சே ! = பெரிய குணங்களை கொண்ட என் மனமே (மனதை தட்டிக் கொடுத்து, அதை நைச்சியம் பண்ணுகிறார்)
அடிபணிந்தேனுன்னைப் = அடி பணிந்தேன் உன்னை
பேய்ப்பிறவிப் = பேயாய் பறக்கும் இந்த பிறவி
பூரியரோடுள்ள சுற்றம் புலர்த்திப் = கொண்டுள்ள அவர்களின் சகவாசத்தை விலக்கி
பொருவருஞ்சீர் ஆரியன் = ஒப்பற்ற சிறந்த குணங்களை உடைய ஆரியன்
செம்மை = சிறந்த
இராமானுச முனிக்கன்பு செய்யும் = இராமானுஜன் என்ற முனிவனுக்கு அன்பு செய்யும்
சீரியபேறுடையார் = சிறந்த பேறு பெற்றவர்களின்
அடிக்கீழென்னைச் சேர்த்ததற்கே.= அடிகளுக்கு கீழே என்னை சேர்த்ததற்கு
இராமானுஜர் ஒரு அடியார்.
அவர் மேல் அன்பு செய்தவர்கள் அவரின் அடியார்கள்
அப்படிப்பட்ட அடியவர்களின் திருவடிக்கீழ் இவர் இருக்கிறார்...
எவ்வளவு பணிவு. எவ்வளவு தன்னடக்கம்.
ஆண்டா ஆலங்காடா உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே என்பார் சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள்
தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் என்பது தெய்வப் புலவர் சேக்கிழார் வாக்கு
அன்பர் பணி செய்ய என்னை ஆளாக்கி விடு விட்டால் இன்ப நிலை தானே வந்து எய்தும் பராபரமே என்பார் தாயுமானவர்
How humble he is!Ramanuja Noortrnadhadhi is called as 'Prabhandha Gayatri'.Mikka Namdri.
ReplyDeleteWonderful poem.
ReplyDeleteசும்மா அடி அடின்னு அடிச்சுப் பிச்சுப் போட்டு விட்டார்! அருமை.
ReplyDelete