வில்லி பாரதம் - கங்கா தேவியின் அழகு
தன்னை மணந்து கொள்ளும்படி கங்கையிடம் சந்துனு மகாராஜா வேண்டினான். அதற்க்கு கங்கை என்ன சொன்னாள்?
முதலில் அவளுக்கு வெட்கம் வந்தது. வெட்கத்தால் அவன் முகம் பார்க்க முடியாமல் தலை கவிழ்ந்தாள். தலை கவிழ்ந்தாள் என்றால் என்னமோ லேசாக தலையயை சாய்த்தாள் என்று பொருள் அல்ல. அவள் நாடி வளைந்து உடலை தொடுகிறது. ஆபரணங்கள் பூண்ட அவளது மார்பகத்தை அவளே பார்க்கும் அளவுக்கு தலை கவிழ்ந்தாள். அப்படி அவள் வெட்கப் பட்ட போது, அவளின் அழகு இன்னும் கூடியது.. வெட்கப் படும் போது பெண்கள் மேலும் அழகாகத் தோன்றுவது இயற்கை. அவள் உடல் மின்னியது. அவள் உடல் மேலும் மெருகேறியது. அந்த நிலவே அவள் மேனியின் ஒளியைப் பெற்று பிரகாசித்ததை போல இருந்தது.
வில்லி புத்துராரின் பாடல்
நாணினளாமென நதிமடந்தையும்
பூணுறுமுலைமுகம் பொருந்தநோக்கினள்
சேணுறுதனதுமெய்த் தேசுபோனகை
வாணிலவெழச்சில வாய்மைகூறுவாள்.
பொருள்
நாணினளாமென = நாணம் கொண்டாள் (என்னை திருமணம் செய்து கொள்கிறாயா என்று சந்தனு கேட்டவுடன்)
நதிமடந்தையும் = நதி மகளான (கங்கையும்)
பூணுறுமுலைமுகம் = பூண் பொருந்திய தன் மார்பகத்தில் அவளின் முகம்
பொருந்தநோக்கினள் = பொருந்தும்படி நோக்கினாள். தலை கவிழ்ந்து அவள் முகம் அவள் மார்பை பார்த்தது என்று பொருள்.
சேணுறு = தூரத்தில் உள்ள (நிலா)
தனது = தன்னுடைய
மெய்த் = உடலின்
தேசுபோனகை = தேஜஸ், ஜ்வலிப்பு, பிரகாசம் அங்கு சென்றதைப் போல
வாணிலவெழச் = வானில் நிலவு எழ
சில வாய்மைகூறுவாள். = சில உண்மைகள் கூறுவாள்
உண்மைகளா அது ? எந்த பெண்ணும் சொல்ல முடியாத, சொல்லக் கூடாத வார்த்தைகளை கூறினாள்....
அவை....
No comments:
Post a Comment