இராமாயணம் - சீதையின் அன்னை
ஒவ்வொரு வார்த்தையும் மந்திரம் தான்.
சொல்லும் நமக்கு வேண்டுமானால் அது சாதரணமாக இருக்கலாம்,
கேட்பவர்களுக்கு அது சில சமயம் உயிர் காக்கும் மருந்தாகவும் அமையலாம். உயிர் கொள்ளும்/கொல்லும் நஞ்சாகவும் அமையலாம்.
அரக்கியின் வார்த்தைகள் திருமகளான சீதையின் உயிரை காத்தது.
அசோகவனத்தில் சீதை துயரமே உருவாக இருந்தாள். ஒரு கட்டத்தில் உயிரை விடவும் துணிந்தாள். இராவணன் தந்த துன்பம் சொல்லி மாளாது அவளுக்கு ஒரே ஒரு ஆறுதல் திரிசடை.
திரிசடை ஆறுதலான வார்த்தைகளை சொல்லி சீதைக்கு துணையாக இருந்தாள். யுத்தம் முடிந்து சீதை அசோக வனம் விடும் போது, நன்றி மறவாமல் திரிசடையை பார்த்து கூறுகிறாள்
தாயே, நீ பலமுறை எனக்கு ஆறுதல் வார்த்தைகளை கூறி இருக்கிறாய்..இராம தூதுவன் வருவான், இராமன் வருவான் என்றெல்லாம் நீ கூறிய வார்த்தைகள் எதுவும் பொய்யாகப் போனது இல்லை. இப்படி நீ சொன்னது எல்லாம் நடந்ததால், உன்னையே தெய்வமாக நான் நினைத்து இத்தனை காலம் உயிர் வாழ்ந்தேன். நான் உயிரை விட என்றோ முடிவு செய்து விட்டேன். நீ சொன்ன ஆறுதல் வார்த்தைகளால் இன்று வரை உயிர் வாழ்ந்தேன் என்றாள். அப்படி சொன்னது யார் ? தாமரை மலரை விட்டு வந்த திருமகள்.
நன்றி மறக்காத சீதையின் தாயன்பு
சீதையையை மகளாக எண்ணி அவளுக்கு ஆறுதலும் தேறுதலும் சொல்லி அவள் உயிர் காத்த திரிசடையின் தாயன்பு...
கண்ணில் நீர் பனிக்கும் அந்தப் பாடல்...
பாடல்
அன்னை! நீ உரைத்தது ஒன்றும் அழிந்திலது; ஆதலானே
உன்னையே தெய்வமாக் கொண்டு, இத்தனை காலம் உய்ந்தேன்;
இன்னம், இவ் இரவு முற்றும் இருக்கின்றேன்; இறத்தல் என்பால்
முன்னமே முடிந்தது அன்றே ?’ என்றனள்-முளரி நீத்தாள்.
பொருள்
அன்னை! = தாயே
நீ உரைத்தது = நீ இதுவரை சொல்லியது
ஒன்றும் அழிந்திலது = எதுவுமே நடக்காமல் போனது இல்லை
ஆதலானே = ஆதலால்
உன்னையே தெய்வமாக் கொண்டு = உன்னையே தெய்வமாகக் கொண்டு
இத்தனை காலம் உய்ந்தேன் = இத்தனை காலம் உயிர் வாழ்ந்தேன்
இன்னம் = இன்னும் கூட
இவ் இரவு முற்றும் இருக்கின்றேன் = இந்த இரவு முழுவதும் இருப்பேன்
இறத்தல் என்பால் = நான் உயிரை விடுவது என்பது
முன்னமே முடிந்தது அன்றே ? = முன்பே முடிவு செயப்பட்டது ...அதாவது நான் முடிவு செய்து விட்டேன்
என்றனள்-முளரி நீத்தாள் = என்று கூறினாள் , தாமரை மலரை விட்டு நீங்கி வந்த அவள். முளரி என்றாள் தாமரை
திரிசடை என்பது யார்? மறந்துவிட்டேன். இராவணன் மனைவியா?
ReplyDeleteராவணனின் தம்பி மகள்
Delete