Wednesday, January 23, 2013

சிலப்பதிகாரம் - இது என்ன மாயம் ?


சிலப்பதிகாரம் - இது என்ன மாயம் ?


அன்று வடக்கில் உள்ள மலையை மத்தாக்கி, வாசுகி என்ற பாம்பை நாணாக்கி, பாற்கடலை கலக்கினாய். ஆனால் இன்றோ யசோதையின் சின்ன கயிற்றால் கட்டப்பட்டு கிடக்கிறாய். இது என்ன மாயம் ?

பாடல் 

வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக
கடல்வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே
கலக்கியகை யசோதையார் கடைகயிற்றாற் கட்டுண்கை
மலர்க்கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே ;

பொருள் 

வடவரையை = வரை என்றால் மலை;  வட வரை = வடக்கில் உள்ள மலை 
 
மத்தாக்கி = மத்தாக்கி

வாசுகியை = வாசுகி என்ற பாம்பை 

நாணாக்கி = நாணாக்கி 

கடல்வண்ணன் = கடல் போன்ற நிறம் கொண்டவன்

பண்டொருநாள் = முன்பொரு நாள்

கடல்வயிறு = கடலின் வயிற்றை

கலக்கினையே = கலக்கினாயே

கலக்கியகை = அப்படி கலக்கிய நீ 

யசோதையார் = யசோதையின்

கடைகயிற்றாற் = சின்ன தாம்புக் கயிற்றால் 

கட்டுண்கை = கட்டுப்பட்டு 

மலர்க்கமல = தாமரை மலர் போன்ற 
 
உந்தியாய் = உந்தியை உடையவனே 

மாயமோ மருட்கைத்தே = இது என்ன மாயமோ, மயக்கம் வருகின்றதே 

2 comments:

  1. இந்தப் பாடல், MS சுப்புலட்சுமி அவர்கள் பாடியது என் காதில் ஒலிக்கிறது. நல்ல பாடல். நன்றி.

    ReplyDelete
  2. ஒரு பிரம்மாண்டமான விஷயத்தை, அதற்கு சற்றும் மாறான சிறு பிள்ளை விளையாட்டுடன் இணைத்து ஆய்ச்சியர்கள் அதிசயிக்கின்றனர்.

    ReplyDelete