கந்தரனுபூதி - உதியா மரியா
(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்)
கடவுள் என்றால் என்ன?
அது ஆணா, பெண்ணா, அலியா,உருவம் உள்ளதா, அருவமானதா?
ஒன்றும் தெரியாது. இருந்தும் உருவ வழிபாடு தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இப்படி சிந்தித்தால் என்ன?
உருவம் என்பதை விட்டு விட்டு,, தன்மை, குணம் என்று நினைத்தால் என்ன?
அப்படி நினைத்தால், எல்லா கடவுளுக்கும் உள்ள குணங்கள் ஒரே மாதிரித்தான் இருக்கும்.
சிவன், திருமால், முருகன், விநாயாகர் என்று பல்வேறு வடிவங்களில் வழிபட்டாலும், குணம் என்று பார்க்கும் போது அது ஒன்றாகவே இருக்கும் என்று அருணகிரிநாதர் சொல்கிறார்.
பாடல்
உதியா மரியா உணரா மறவா
விதிமா லறியா விமலன் புதல்வா !
அதிகா ! அநகா ! அபயா ! அமரா
பதிகாவல ! சூர பயங்கரனே !
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post.html
(pl click the above link to continue reading)
உதியா = உதிக்காமல் இருப்பவன். அதாவது இறைவனுக்கு தோற்றம் என்று ஒன்று கிடையாது. அது ஒரு குணம்.
மரியா = மரித்தல் என்றால் இறத்தல். இறைவனுக்கு இறப்பு கிடையாது. முடிவு கிடையாது. பிறப்பும் இல்லை. இறப்பும் இல்லை. ஆதியும் இல்லை, அந்தமும் இல்லை.
உணரா = உணர்தல் என்றால் நினைத்தல்
மறவா = மறவா என்றால் மறத்தல். நினைப்பும் இல்லை, மறப்பும் இல்லை.
விதி = விதி, தலை எழுத்தை எழுதும் பிரமன்
மால் = மால் என்றால் திருமால்
அறியா = அறியாதவன்
விமலன் புதல்வா ! = வி என்றால் இல்லை. நாயகன் என்றால் தலைவன். வி-நாயகன் என்றால் தனக்கு மேல் ஒரு தலைவன் இல்லாதவன். மலம் (குற்றம்) உள்ளவன் மலன். குற்றமே இல்லாதவன் வி-மலன். குற்றமே இல்லாத சிவனின் புதல்வன்.
அதிகா ! = உயர்ந்தவன்
அநகா = பாவம் இல்லாதவன்
அபயா ! = அபயம் அளிப்பவன்
அமரா = என்றும் இருப்பவன்
பதிகாவல ! = தேவர் உலகை காப்பவன்
சூர பயங்கரனே ! = சூரர்களுக்கு பயங்கரமானவன்
இப்படி இறைவனின் குணங்களை மட்டும் அடுக்கிக் கொண்டே போகிறார்.
உருவம் இல்லாத ஒன்றை சிந்திக்க சிந்திக்க, இறை என்பது ஒன்றுதான் என்ற தெளிவு பிறக்கும்.
என் கடவுள் உயர்ந்தவர்.உன் கடவுள் தாழ்ந்தவர். என் மதம் சிறந்தது.உன் மதம் கீழானது என்ற பாகுபாடுகள் மறையும்.
பாகுபாடு மறைந்தால், மனதில் உள்ள விருப்பு வெறுப்பு குறையும். மனம் சலனப்படாது.
சலனமற்ற மனதில் தான் உண்மை தெளிவு பிறக்கும்.
அடுத்த முறை உதயா மரியா என்று இந்தப் பாடலை பாடும் போது உருவம் அற்ற, குணங்கள் நிறைந்த அந்த ஒன்றை எண்ணிப் பாருங்கள்.
[
மெய்யியல் - பகுதி 1
https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html
மெய்யியல் - பகுதி 2
https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html
மெய்யியல் - பகுதி 3
https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html
மெய்யியல் - பகுதி 4
https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html
மெய்யியல் - பகுதி 5
https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html
மெய்யியல் - பகுதி 6
https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html
மெய்யியல் - பகுதி 7
https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html
நின்று தயங்குவதே
https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html
வள்ளி பதம் பணியும்
https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html
விடுவாய் வினையா வையுமே
https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html
மெய்ப் பொருள் பேசியவா
https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html
பரிசென் றொழிவேன்
https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_7.html
எதிரப் படுவாய்
https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_26.html
மெய்ப் பொருள் பேசியவா
https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_11.html
அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ
https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_8.html
முருகன் கழல் பெற்று உய்வாய்
https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_14.html
என்று அருள்வாய் ?
பேராசை எனும் பிணியில் பிணிபட்டு
https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_29.html
யாமோதிய கல்வியும் பாகம் 2
https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_29.html
]
No comments:
Post a Comment