கம்ப இராமாயணம் - சடாயு புலம்பல்
சடாயு இராம இலக்குவனர்களைப் பார்த்து "நீங்கள் யார் " என்று கேட்டார் . அதற்கு அவர்கள் "நாங்கள் தயாரதனின் பிள்ளைகள் " என்று கூறினார்கள் .
அதைக் கேட்டதும் ஒரு சிறு குன்றின் மேல் அமர்ந்து இருந்த ஜடாயு வேகமாக தத்தி தத்தி வந்து தன் பெரிய சிறகுகளால் அவர்களை அணைத்துக் கொண்டார். மேலும் , "தயரதன் நலமாக இருக்கிறாரா" என்று விசாரித்தார் .
பாடல்
உரைத்தலும், பொங்கிய உவகை வேலையன்,
தரைத்தலை இழிந்து அவர்த் தழுவு காதலன்,
'விரைத் தடந் தாரினான், வேந்தர் வேந்தன்தன்,
வரைத் தடந் தோள் இணை வலியவோ?' என்றான்.
உரைத்தலும் = "நாங்கள் தயரதனின் பிள்ளைகள் " என்று சொன்னவுடன்
பொங்கிய =பொங்கி வந்த
உவகை = மகிழ்ச்சிக்
வேலையன் = கடல் போல வர
தரைத்தலை இழிந்து = குன்றின் மேல் இருந்து தரைக்கு வந்து
அவர்த் தழுவு காதலன் = அவர்களை (இராம இலக்குவர்களை ) தழுவும் காதல் கொண்ட சடாயு
'விரைத் = மணம் பொருந்திய
தடந் = பெரிய
தாரினான் = மாலை அணிந்த
வேந்தர் வேந்தன்தன் = அரசர்களுக்கு அரசனான
வரைத் = மலை போன்ற
தடந் தோள் = பெரிய தோள்கள்
இணை = இரண்டும்
வலியவோ?' = வலிமையாக இருக்கின்றனவா
என்றான் = என்று கேட்டான் .
அவ்வளவு ஆர்வத்தோடு கேட்ட ஜடாயுவுக்கு இராம இலக்குவனர்கள் என்ன பதில் சொன்னார்கள் ?
என்ன சொல்லி இருப்பார்கள் என்று தெரியும் . எப்படி சொல்லி இருப்பார்கள் என்று தெரியாது .
நாளை சிந்திப்போம் .
No comments:
Post a Comment