கந்தர் அலங்காரம் - ஆனந்தத் தேன் - பகுதி 1
அருன்ணகிரி நாதர் அருளிச் செய்தது கந்தர் அலங்காரம்.
அதில் ஒரு பாடல்
ஒளியில் விளைந்த உ யர்ஞான பூதரத் துச்சியின்மேல்
அளியில் விளைந்ததொ ராநந்தத் தேனை அநாதியிலே
வெளியில் விளைந்த வெறும்பாழைப்பெற்ற வெறுந்தனியைத்
தௌiய விளம்பியவா, முகமாறுடைத் தேசிகனே.
சந்தக் கவியான அருணகிரியின் பாடல்களை சீர் பிரிக்காமல் உணர்ந்து கொள்வது கடினம்
ஒளியில் விளைந்த உயர் ஞான பூதரத்தின் உச்சியின் மேல்
அளியில் விளைந்த ஓர் ஆனந்தத் தேனை அனாதியிலே
வெளியில் விளைந்த வெறும் பாழை பெற்ற வெறும் தனியை
தெளிய விளம்பியவா, முகம் ஆறு உடை தேசிகனே
விளக்க உரை
நீங்கள் உங்கள் வேலை நிமித்தமாய் ஒரு புதிய ஊருக்கு போய் இருக்கிறீர்கள் , அல்லது உங்கள் நண்பர் அல்லது உறவினர் வீட்டுக்கு முதன் முதலாய் போய் இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். போகும் வழி எல்லாம் பார்த்துக் கொண்டே போகிறீர்கள். புது புது கடைகள் , புதிய கட்டிடங்கள், வாகனங்கள் என்று எல்லாம் புதியதாய் இருக்கிறது.
நீங்கள் தங்கும் இடம் ஒரு பல மாடி கட்டிடம் என்று வைத்துக் கொள்வோம். அங்கிருந்து பார்கிறீர்கள்...அந்த ஊர் இன்னும் தெளிவாகத் தெரியும்.அதன் பரப்பு, அதன் வாகன நெரிசல்கள் , தூரத்தில் ஒரு ஆறு, மரங்கள் என்று இன்னும் விஸ்தீரமாகத் தெரியும். அதுவே , அந்த ஊரில் ஒரு மலை மேல் இருந்து பார்த்தால் இன்னும் ஒரு பரந்துபட்ட விரிவான பார்க்கும் வெளி (view ) கிடைக்கும்.
அருணகிரி நாதர் இந்த உலகை அப்படி ஒரு உயர்ந்த இடத்தில் இருந்து பார்க்கிறார்.
உயர் ஞான பூதரத்தின் உச்சியின் மேல்
பூதரம் என்றால் மலை. பூதரத்தின் உச்சி, மலையின் உச்சி.
அது எந்தமாதிரி மலை .. நம்ம ஊர் பரங்கி மலை, இமயமலை மாதிரி அல்ல...ஞான என்னும் மலை உச்சி ....
எந்த மாதிரி ஞானம் ... ஏதோ சில பல புத்தகங்களை படித்து வரும் ஞானம் அல்ல...
உயர் ஞானம்.
உயர் ஞான பூதரத்தின் உச்சியின் மேல்
அங்கிருந்து பார்கிறார்..என்ன பார்த்தார்...அவருக்கு என்ன காட்சி கிடைத்தது ?
காட்சி விரியும் ....
No comments:
Post a Comment