Monday, March 4, 2013

இராமாயணம் - அலகி லாவிளையாட்டுடையார்


இராமாயணம் - சரண் நாங்களே



உலகம் யாவையும் தாம்உள ஆக்கலும்
     நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
     அலகி லாவிளையாட்டுடையார் அவர்
     தலைவர்; அன்னவர்க் கேசரண் நாங்களே.





கூறியது கூறல் பிழை.

இந்த பாடலை இதற்க்கு முன்பே எழுதினேன். இருந்தாலும், பயில் தொறும் நூல் நயம் போலும் படிக்க படிக்க புது புது அர்த்தங்கள் வந்து கொண்டே இருக்கிறது.

"அலகிலா விளையாட்டு உடையார் "

ஒருவரை ஒருவர் யுத்தத்தில் அடித்துக் கொண்டு சாவது, மக்கள் ஆயிரக் கணக்கில் நோயில், வெள்ளத்தில், பூகம்பத்தில் இறப்பது ஒரு விளையாட்டா என்று ஒரு கேள்வி எழலாம்.

சிந்திக்கப் படவேண்டிய கேள்வி.

நீங்கள் ஒரு டென்னிஸ் விளையாட்டை பார்த்துக் கொண்டு இருகிறீர்கள். இரண்டு பக்கமும் நன்றாக விளையாடுகிறார்கள். யார் வெற்றி பெறுவார்கள், யார் தோல்வி அடைவார்கள் என்று தெரியவில்லை. கடைசி கேம். ஒருவர் வென்று மற்றவர் தோற்கிறார்.

தோல்வி அடைந்தவருக்காக நீங்கள் அழுவீர்களா ? வெற்றி பெற்றவருக்காக நீங்கள் பாராட்டு விழா எடுப்பீர்களா ?

தோற்றவன் அழுவான். வென்றவன் சிரிப்பான். ஆனால் நீங்கள் ?


அது ஒரு விளையாட்டு. வெற்றியும் தோல்வியும் சகஜம். விளையாட்டை விளையாட்டாக பார்த்தால் வெற்றி தோல்வி பெரிதாகத் தெரியாது. sportsmaship என்று சொல்வார்கள். விளையாடுவது முக்கியம் வெற்றி தோல்விமுக்கியம் அல்ல.

வாழ்க்கை என்றால் இறப்பும் பிறப்பும் இருக்கும். சண்டை சச்சரவு இருக்கும். மேடு பள்ளம் இருக்கும்.

அடித்தவன் சிரிக்கிறான். அடி வாங்கியவன் அழுகிறான்.

வெளியே இருந்து பார்க்கும் நீங்கள், அவனுகளை விடு, இதே வேலையா போச்சு அவனுகளுக்கு என்று சிரித்துவிட்டு நகர்கிறீர்கள்.....

அலகிலா விளையாட்டு உடையார் அவர்....


தொடரும்

2 comments:

  1. அருமையான விளக்கம். ஓவ்வொரு காண்டத்திலும் முதல் பாடல் கடவுள் வாழ்த்து என்றும் அந்த பாடல் அந்தந்த காண்டத்தின் சிறப்பை highlight செய்திருக்குமாம் . Your valuable input please.

    ReplyDelete
  2. அப்படி அவருக்கு எல்லாமே விளையாட்டாக இருந்தால், அவரை வணங்கி, வரங்கள் கேட்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது?!? சும்மா நம்மை விளையாடவிட்டு, அந்த விளையாட்டில் எதையுமே நிர்ணயிக்காமல், சும்மா வேடிக்கை பார்க்கும் கடவுளை வணங்கி என்ன பயன்?!?

    ReplyDelete