பெரிய புராணம் - ஒரு அறிமுகம்
அறுபத்து மூன்று நாயன்மார்களை பற்றி பாடல்களின் தொகுப்பு பெரிய புராணம். எழுதியவர் தெய்வப் புலவர் சேக்கிழார்.
கம்ப இராமாயணம் போல் படிக்க அவ்வளவு எளிதானது அல்ல என்றாலும் தீந்தமிழால் எதற்கும் குறைவானது அல்ல இந்த நூல்.
சேக்கிழார் ஒவ்வொரு பாடலையும் மிக மிக நுணுக்காமாக பாடி இருக்கிறார்.
சிவ புராணம், கந்த புராணம் என்று பதினெட்டு புராணங்கள் உண்டு என்றாலும் அவை எல்லாம் "பெரிய" புராணம் என்ற அடை மொழியை பெறவில்லை.
அடியார்களை பற்றி கூறும் இந்த புராணம் மட்டும்தான் பெரிய என்ற அடை மொழியை பெற்றது.
ஏன் ?
அடியார்கள் மனத்தில் ஆண்டவன் இருப்பான். ஆண்டவன் மனத்தில் அடியார் இருக்க மாட்டார்
அடியாரை தொழும் போது ஆண்டவனையும் சேர்த்துத் தொழுவதனால், அடியார் புராணம் பெரிய புராணம் என்று பெயர் பெற்றது.
அடியார் மனதில் ஆண்டவன் இருப்பான் என்று நான் சொல்லவில்லை....
என் உள்ளத்துள், ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா, விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனஓங்கி, ஆழ்ந்தகன்ற நுண்ணியனே
என்று மாணிக்க வாசகர் சொல்லுகிறார்.
இறைவன் இருக்கிறானா, இல்லையா என்று அறிந்து கொள்ள அல்ல
அடியவர்கள் நல்லவர்களா, கெட்டவர்களா என்று அறிந்து கொள்ள அல்ல...
தமிழின் சுவைக்காக, தெய்வப் புலவர் சேக்கிழாரின் தமிழ் பாடல்களுக்காக பெரிய புராணம் படிக்கலாம்.
மிக மிக நுணக்கமான பாடல்கள்.
இதில் வரும் முதல் பாடலான "உலகெல்லாம் உணர்ந்து ஓதற்கரியவன் " என்ற பாடலுக்கு இராமலிங்க அடிகளார் மூன்று நாட்கள் அர்த்தம் விரித்துச் சொன்னாராம். ஒரு பாடலில் அவ்வளவு அர்த்தச் செறிவு.
எவ்வளவு தான் அடியார்களின் புகழை கூடிச் சொன்னாலும் அது அதிகாமாகாது என்று ஆரம்பிக்கிறார் சேக்கிழார்.....
அளவிலாத பெருமையராகிய
அளவிலா அடியார் புகழ் கூறுகேன்
அளவு கூட உரைப்பது அரிது ஆயினும்
அளவிலாசை துரைப்ப அறைகுவேன்.
பெரிய புராணத்தில் எனக்கு பிடித்த பாடல்கள் சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆவல்....அவை உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன் ....
ஆவலுடன் அதிர்பார்க்கிறோம்.
ReplyDelete