Friday, March 22, 2013

திருக்குறள் - அகர முதல - 2

திருக்குறள் - அகர முதல - 2


அகர முதல் எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு

அது என்ன பகவன் ? இதற்கு முன்னால் பகவன் என்று கேட்டு இருக்கிறீர்களா ?

பகவன் என்பது பகு என்ற வேர்ச்சொல்லில் வந்தது.

பகுப்பவன் - உயிர்களின் நல் வினை, தீவினை அவற்றை அறிந்து அவற்றிற்கு பலன்களை பகுத்து கொடுப்பவன் என்பதால் பகவன். இது ஒரு பொருள்.

இன்னொரு பொருள்

இன்றைய அறிவியல் உயிர்கள் எப்படி தோன்றின என்றால் பரணாம வளர்ச்சியின் மூலம் தோன்றின  (Evolution ). ஒன்று பலவாக பிரிந்து, உரு மாறி, உரு மாறி இத்தனை உயிர்களும் தோன்றின என்று இன்றைய அறிவியல் கூறுகிறது. ஆதி அணுவில் இருந்து வெடித்துச் சிதறி, இன்று இந்த நிலைக்கு வந்து இருக்கிறது. இப்படி பகுக்கப் பட்டு வந்ததால் பகவன். அவனில் இருந்து வந்ததுதான் எல்லாம். (பகுத்து உண்டு பல்லோர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை என்பதும் வள்ளுவம் )

அப்படி என்றால், உடனே நம்ம ஆளு "எல்லாம் ஒன்றில் இருந்து வந்தது என்றால், அந்த பகவன் எங்கிருந்து வந்தான் " என்று கேட்ப்பான். கேட்பான் என்று வள்ளுவருக்கும் தெரியும்.

எனவே வெறும் பகவன் என்று சொல்லவில்லை, "ஆதி பகவன்" என்று கூறினார். அவன் ஆதி. அவன் மூலம்.

ஆதல் , ஆகுதல் என்ற தொழிற்பெயரில் இருந்து வந்த சொல் தான் "ஆதி". அவனில் இருந்து எல்லாம்  ஆகி வந்ததால் அவன் ஆதி பகவன்.


இன்று நாம் பல தெய்வங்களை கூறுகிறோம்...அல்லா, ஏசு, புத்தர், பெருமாள் சிவன், பிள்ளையார், காளி, என்று பல்லாயிரக்கணக்கான தெய்வங்கள் இருக்கின்றன. வடிவங்கள் எத்தனை இருந்தாலும், எல்லாம் ஒரே ஒரு தெய்வத்தைத்தான்  குறிக்கும்...அது தான் "ஆதி பகவன்". அந்த ஆதியில் இருந்து வந்ததுதான்  இத்தனை தெய்வங்களும், மனிதர்களும், விலங்குகளும், பொருள்களும்.. எனவே, ஆதி பகவன்.

அருவில் இருந்து உருவாகவும், உருவில் இருந்து பல்வேறு வடிவாகவும் ஆனவன் . உருவாய், அருவாய், உளதாய், இலதாய் என்பார் அருணகிரி.


ஒரு குறளில் இவ்வளவு அர்த்தம். 1330 குறள் இருக்கிறது.

மேலும் அறிவோம்.

3 comments:

  1. Very good.Missed learning Kural during my school days.Better Late than Never.Hats off to you for bringing the best from Tamil Literature.Thanks.

    ReplyDelete
  2. அட, இது என்னாங்கடா வம்பாப் போச்சு! எல்லாம் "ஆதி பகவனில்" இருந்து வந்தால், அந்த "ஆதி பகவன்" எதில் இருந்து வந்தது? "அதி ஆதி பகவனில்" இருந்தா? அப்படியானால், அந்த "அதி ஆதி பகவன்" எதில் இருந்து வந்தது? "அதி அதி ஆதி பகவனில்" இருந்தா?! ...

    ReplyDelete
    Replies
    1. Student: From where the world come from ?

      Scientist: It all came from Big Bang

      Student: From where the big bang came from...

      Scientist...well, that is event horizon, time starts from there, you cannot ask what happened before that...

      அட, இது என்னாங்கடா வம்பாப் போச்சு!

      Delete