இராமாயணம் - முடிசூட்டு விழாவிற்கு வரதாவர்கள்
இராமனின் முடி சூட்டு விழா. யார் யாரெல்லாமோ வந்து இருக்கிறார்கள். அந்த பட்டியலை சொல்லிக்கொண்டு போனால் மிக நீளமாக இருக்கும்.
யார் வரவில்லை என்று சொல்லிவிட்டால் மற்றவர்கள் எல்லோரும் வந்து விட்டார்கள் என்று அர்த்தம் பண்ணிக்க் கொள்ளலாம் அல்லவா ?
வராதவர்கள் பட்டியல் ரொம்ப சின்னது. மூணே மூணு பேர் மட்டும் வரவில்லை
முதாலவது - மலைகள். அவைகளால் நகர முடியாது. அவை வரவில்லை.
இரண்டாவது - எட்டு திக்கும் காக்கும் யானைகள். அவை வந்து விட்டால் திசைகளை யார் காப்பாற்றுவது ? எனவே அவை வரவில்லை.
மூன்றாவது - இலங்கை வாழ் அரக்கர்கள்.
நலம் கிளர் பூமி என்னும்
நங்கையை நறுந் துழாயின்
அலங்கலான் புணரும் செல்வம்
காண வந்து அடைந்திலாதார் -
இலங்கையின் நிருதரே; இவ்
ஏழ் உலகத்து வாழும்
விலங்கலும், ஆசை நின்ற
விடா மத விலங்கலேயால்.
பொருள்
நலம் கிளர் = நல்லது எப்போதும் கிளர்ந்து வந்து கொண்டே இருக்கும்
பூமி என்னும் நங்கையை = பூமி என்ற பெண்ணை
நறுந் துழாயின் அலங்கலான் = மணம் வீசும் துளசி மாலை அணிந்தவன் (இராமன்)
புணரும் செல்வம் = அடையும் செல்வம்
காண வந்து அடைந்திலாதார் = காண வந்து சேராதவர்கள்
இலங்கையின் நிருதரே = இலங்கை வாழ் அரக்கரும்
இவ் ஏழ் உலகத்து வாழும் விலங்கலும் = இந்த ஏழு உலகத்திலும் உள்ள மலைகளும்
ஆசை நின்ற விடா மத விலங்கலேயால்.= மதம் பொழியும் அஷ்ட திக்கு யானைகளும் ஆகும்
பட்டம் சூட்டுவது என்பது "பூமி என்னும் நங்கையைப் புணர்வது!" - என்ன ஒரு உருவகம்!
ReplyDeleteயார் வரவில்லை என்பது இரசிக்கத் தகுந்த கற்பனை.
நன்றி.