பெரிய புராணம் - ஏங்குவதும் இரங்குவதும்
திருநாவுகரசர் பிறந்த ஊர் திருவாமூர்.
அந்த ஊரில் சில வருத்ததோடு இருந்தன. சில பரிதாபமாக இருந்தன. இன்னும் சில ஊரை விட்டே ஓடி விட்டன.
என்ன ஊரு இது இல்ல ? இப்படி ஊரா ?
கொஞ்சம் பொறுங்கள்...அதெல்லாம் எது எதுன்னு பார்த்துரலாம்....
அந்த ஊரில் வருந்துவன பெண்களின் இடைகள். அந்த ஊரில் உள்ள பெண்களின் மார்புகளின் பாரம் தாங்காமல் அவர்களின் சின்ன இடைகள் ரொம்ப வருத்தப் பட்டனவாம்....இவ்வளவு பெரிய பாரத்தை எப்படி சுமப்பது என்று....
அவர்கள் இடையில் புனையும் மேகலைகள் பாவமாய் இருந்தனவாம்....நாளும் மெலியும் இடையில் தொங்கிக் கொண்டு இருப்பதால்.....
அந்த ஊரை விட்டு தீமை விலகி ஓடி விட்டதாம்...
பாடல்
ஆங்குவன முலைகள்சுமந்
தணங்குவன மகளிரிடை
ஏங்குவன நூபுரங்கள்
இரங்குவன மணிக்காஞ்சி
ஓங்குவன மாடநிரை
யொழுகுவன வழுவிலறம்
நீங்குவன தீங்குநெறி
நெருங்குவன பெருங்குடிகள்.
பொருள்
ஆங்கு = அங்கு
வன = வனப்பான
முலைகள் = மார்பகங்களை
சுமந்தணங்குவன = சுமந்து + அணங்குவன = அணங்குதல் என்றால் வருந்துதல்.
மகளிரிடை = பெண்களின் இடை
ஏங்குவன = சப்த்தம் போடுவன
நூபுரங்கள் = அவர்கள் அணிந்த காலில் உள்ள கொலுசுகள்
இரங்குவன = பரிதாபத்திற்கு உரியன
மணிக்காஞ்சி = அவர்கள் இடையில் அணியும் மேகலை போன்ற ஆபரணம்.
ஓங்குவன = உயர்ந்து இருப்பன
மாட = மாடங்கள்
நிரை யொழுகுவன = சிறந்தபடி செல்வது
வழுவிலறம் = வழு இல்லாத அறம்
நீங்குவன = அந்த ஊரை விட்டு செல்பவை
தீங்குநெறி = தீய நெறிகள்
நெருங்குவன = நெருங்கி இருப்பவை
பெருங்குடிகள். = உறவினர்கள்
பெண்களின் இடையைத் தவிர யாருக்கும் கவலை இல்லை.
அவர்களின் மணிமேகலை தவிர யாரும் பரிதாபப் படும் நிலையில் இல்லை.
அது ஊரு . அங்க போவோமா ? அந்த ஊரில் தீ சைட்டுகள் இருக்கும் போல இருக்கே...ஒரு ரவுண்டு போயிட்டு வருவோமா ?
ரொம்ப நல்ல, ரசமான பாடல். நன்றி.
ReplyDelete