கம்ப இராமாயாணம் - நினைவும் செய்கையும் மறந்து
ஒரு நொடிப் பொழுதில் இந்திரசித்து பிரமாஸ்திரத்தை இலக்குவன் மேல் எய்து விட்டான்.
அருகில் இருந்த அனுமன் திகைத்தான். இது, யார் இப்படி செய்தது...வந்தவன் இந்திரனா, அவனை அந்த வெள்ளை யானையோடு சேர்த்து எடுத்து எறிந்து விடுகிறேன் பார் என்று வந்தான்...வந்த மாத்திரத்தில் வில்லில் இருந்து புறப்பட்ட ஆயிரம் கடுமையான அம்புகள் தைக்க நினைவும், செய்கையும் மறந்து போய் நிலத்தில் சோர்ந்து விழுந்து விட்டான்.
பாடல்
அனுமன், 'இந்திரன் வந்தவன் என்கொல்,
ஈது அமைந்தான்?
இனி என்? எற்றுவென் களிற்றினோடு
எடுத்து' என எழுந்தான்;
தனுவின் ஆயிரம் கோடி வெங் கடுங்
கணை தைக்க,
நினைவும் செய்கையும் மறந்துபோய்,
நெடு நிலம் சேர்ந்தான்.
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2021/04/blog-post_44.html
(please click the above link to continue reading)
அனுமன்,= அனுமன் நினைத்தான்
'இந்திரன் வந்தவன் என்கொல் = இந்திரனா வந்தது
ஈது அமைந்தான்? = இப்படிச் செய்தவன்
இனி என்? = இனி என்ன செய்வது
எற்றுவென் = தூக்கி எறிவேன்
களிற்றினோடு = யானையோடு
எடுத்து' = எடுத்து
என எழுந்தான்; = என்று எழுந்தான்
தனுவின் = வில்லின்
ஆயிரம் கோடி = ஆயிரம் கோடி
வெங் கடுங்கணை தைக்க, = வெம்மையான கொடிய அம்புகள் தைக்க
நினைவும் = நினைவும்
செய்கையும் = செய்கையும்
மறந்துபோய், = மறந்து போய்
நெடு நிலம் சேர்ந்தான். = நிலத்தில் வீழ்ந்தான்
அப்பேற்பட்ட அனுமனையும் அந்த பிரம்மாஸ்திரம் சாய்த்தது.
இலக்குவன் விழுந்து விட்டான்.
அனுமனும் பேச்சு மூச்சு இல்லாமல் விழுந்து விட்டான்.
இனி போர் என்ன ஆகும் ?
Author's name is not known. Kndly intimate chitaanandamvr@gmail.com
ReplyDeleteOr give Phone No.
This comment has been removed by the author.
ReplyDeletethis e mail id is not working. Is it spelled correctly?
ReplyDelete