Monday, April 26, 2021

திருக்குறள் - வான் சிறப்பு - நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும்

 திருக்குறள் - வான் சிறப்பு - நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் 


மழை பெய்யாவிட்டால், பெரிய கடலும் தன் நீரை இழக்கும். 


கடல் தண்ணி கொஞ்சம் குறைஞ்சா என்ன ஆகிவிடப் போகிறது ? எவ்வளவு தண்ணி இருந்தாலும், அதுனால என்ன பலன்? எல்லாம் உப்புத் தண்ணி. ஒரு கை அள்ளி குடிக்க முடியாது.  அதை வைத்துக் கொண்டு என்ன செய்வது. 


அதுல கொஞ்சம் குறைஞ்சா என்ன ஆயிரும்?


பாடல் 


நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி

தான்நல்கா தாகி விடின்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/04/blog-post_26.html


(please click the above link to continue reading)


நெடுங்கடலும் = பெரிய கடலும் 

தன் = தன்னுடைய 

நீர்மை = இயல்பு 

குன்றும் = குறையும் 

தடிந்து = பெருகி, பெரிதான 

எழிலி = மேகம் 

தான் = அது 

நல்கா தாகி விடின் = கொடுக்காமல் இருந்து விட்டால் 


"நெடுங்கடலும்" என்பதில் உள்ள உம்மை உயர்வு சிறப்பு உம்மை. 


கடலே குறைந்து போய் விடும் என்றால், மத்ததெல்லாம் எந்த மூலை?


ஆறு, குளம், கண்மாய், ஏரி, குட்டை, கிணறு எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போய் விடும் என்று குறிக்கவே "நெடுங்கடலும்" என்றார். 


நாடு இப்படியே போனால் ரிசர்வ் வங்கியிலும் பணம் இருக்காது என்று கூறினால் வேறு எங்கும் இருக்காது என்று அறிந்து கொள்ள முடிகிறது அல்லவா?


எனவே, இந்த ஏழு பாட்டால் மழையின் மகத்துவம் கூறினார். 


இனி என்ன மழை பற்றிச் சொல்ல இருக்கிறது? எல்லாம் தான் சொல்லி ஆகி விட்டதே? இன்னும் மூணு குறளில் என்ன சொல்லப் போகிறார்? 


உங்களைப் போலவே நானும் ஆவலாய் இருக்கிறேன். 


நாளை சந்திப்போம்.

1 comment:

  1. Dear Author,

    your essays are excellent. I am sending them to all my contacts.They also enjoy them very much.

    I do not know anything about you, including your name. I could not find it anywhere.

    Kindly give your name at the end of the essays.

    Chittanandam

    I am not able to type in Tamil please.

    ReplyDelete