கம்ப இராமாயணம் - நன் மனைக்கு உரிய பூவையை
துணையை பிரிந்து இருப்பது என்பது மிகவும் துக்ககரமான ஒன்றுதான்.
இருக்கும் போது துணையின் மதிப்பு தெரிவது இல்லை. பிரிந்த பின் அந்த சோகம் பிடித்துக் கொள்கிறது.
சீதையை பிரிந்து இருக்கும் இராமன், சுக்ரீவனை சந்திக்கிறான். அவர்களுக்குள் நட்பு மலர்கிறது. சுக்ரீவன், இராமனை விருந்துக்கு அழைக்கிறான். விருந்து பரிமாறும் போது, சுக்ரீவனின் மனைவி இல்லாததை கண்டு இராமன் மனம் வருந்துகிறான்.
"பொருந்திய நல்ல வீட்டுக்கு உரிய பெண்ணை (மனைவியை) நீயும் பிரிந்து இருக்கிறாய் போல இருக்கிறது"
என்று இராமன் கூறுகிறான். "நீயும்" என்ற சொல்லில், நான் பிரிந்து இருக்கிறேன். அது போல் நீயும் பிரிந்து இருக்கிறாய் போல என்று கூறினான்.
பாடல்
விருந்தும் ஆகி, அம்மெய்ம்மை அன்பினோடு
இருந்து, நோக்கி, நொந்து, இறைவன், சிந்தியா,
'பொருந்து நன் மனைக்கு உரிய பூவையைப்
பிரிந்துளாய்கொலோ நீயும் பின்?' என்றான்.
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2021/04/blog-post_4.html
(click the above link to continue reading)
விருந்தும் ஆகி = விருந்தினனாகி
அம்மெய்ம்மை அன்பினோடு = அந்த உண்மையான அன்போடு
இருந்து = அங்கே இருந்து
நோக்கி = சுக்ரீவனை நோக்கி
நொந்து = மனம் வருந்தி
இறைவன் = இறைவனாகிய இராமன்
சிந்தியா = சிந்தித்து
'பொருந்து = பொருந்தும்
நன் மனைக்கு = நல்ல மனைக்கு
உரிய பூவையைப் = உரிய பூவையை (மனைவியை)
பிரிந்துளாய்கொலோ = பிரிந்து இருக்கிறாய் போல இருக்கிறது
நீயும் பின்?' = நீயும்
என்றான். = என்றான்
"மனைக்கு உரிய பூவையை" - மனைவி தான் மனைக்கு உரியவள். அவள் இல்லாமல் மனை சிறக்காது என்பது நம் பண்பாடு. இல்லை, இந்த வீட்டை பார்த்துக் கொள்வது என் வேலை இல்லை என்று பெண்கள் நினைக்கும் ஒரு கால கட்டத்துக்கு நாம் வந்து விட்டோம்.
அதில் தவறு இல்லை. கால மாற்றம். அனைத்து அறங்களும் கொஞ்சம் கொஞ்சமாக சிதையும் போது, இல்லறம் மட்டும் அதற்கு விதி விலக்காக இருக்க முடியாது.
இராமன் வாழ்ந்த காலம் என்று ஒன்று இருந்தது. சக்கரவர்த்தி திருமகனான இராமன் சொல்கிறான் "என் வீட்டுக்குத் உரியவள் என் மனைவிதான். நான் இல்லை" என்றான்.
முற்றிலும் மாறவில்லை. இன்றும் மனைவியை அகமுடையாள் எனக் கூறுவது வழக்கத்தில் உள்ளது
ReplyDelete