கலிங்கத்துப் பரணி - கணவர் தோள் மலையில் ஆடி வரும் மயில்
கணவன் போர்க்களம் சென்று திரும்பி வருகிறான். வரத் தாமதமாகி விட்டது. மனைவி கோவித்துக் கொண்டு கதவை திறக்க மாட்டேன் என்கிறாள். அவளை கொஞ்சி கொஞ்சி கதவைத் திறக்க சொல்கிறான் கணவன்.
வீரமும் காதலும் கொஞ்சும் பாடல்கள்.
கலிங்கத்துப் பரணியில் கடை திறப்பு.
பாடல்
விலையி லாதவடம் முலையி லாட
விழி குழையி லாட
விழை கணவர்தோள் மலையி லாடி
வரு மயில்கள் போலவரு
மடந லீர்கடைகள் திறமினோ.
பொருள்
விலையி லாதவடம் = விலை மதிப்பில்லாத கழுத்தில் அணியும் ஆரம் (chain )
முலையி லாட = மார்பின் மேல் விழுந்து விளையாட
விழி குழையி லாட = பெண்களுக்கு கண்கள் நீண்டு இருந்தால் அழகு. காதளவோடிய கண்கள் என்று சொல்வார்கள். இங்கே, பெண்களின் கண்கள் காது நீண்டு அது காதில் அணிந்துள்ள அணிகலன்களோடு விளையாடுகிரதாம். விழி, குழையில் ஆட
விழை கணவர் = விரும்புகின்ற கணவர்
தோள் மலையி லாடி = தோள் நேட்ற மலையில் ஆடி
வரு மயில்கள் = வருகின்ற மயில்கள்
போலவரு = போல வரும்
மட நலீர் = வெகுளித் தனம் நிறைந்த நல்ல பெண்களே
கடைகள் திறமினோ = கொஞ்சம் கதவைத் திறங்கம்மா. திறக்க மாட்டீங்களா என்று கெஞ்சுகிறான், கொஞ்சுகிறான்.
அருமையான சிருங்கார ரசம் ததும்பும் பாடல்! நன்றி.
ReplyDelete"கண்டாங்கி முன்னாட, கன்னி மனம் பின்னாட, கண்டு கண்டு நானாட, செண்டாக நீ ஆடு!"
ReplyDeleteஇந்த வரி "கட்டோடு குழலாட ஆட" என்ற பாடலில் வருகிறது. என்னவோ நினைவுக்கு வந்தது!