பழமொழி - நாவிற்கு வறுமை இல்லை
இராமனை மனிதன் மனிதன் என்று சொல்லி அழிந்தான் இராவணன்.
கண்ணனை இடையன் இடையன் என்று சொல்லி அழிந்தான் துரியோதனன்
இராமனுக்கும், கண்ணனுக்கும் இந்த நிலை என்றால் நம் நிலை என்ன.
பழி சொல்லும் நாவுக்கு வறுமை என்று ஒன்று கிடையாது. எதையாவது சொல்லிக் கொண்டே இருக்கும்.
"பசுக் கூட்டங்களை மழையில் இருந்து காப்பாற்றிய கண்ணனை இடையன் என்று இந்த உலகம் கூறிற்று. தீங்கு சொல்லும் நாவுக்கு தேவர்கள், மனிதர்கள் என்று பாகுபாட்டெல்லாம் கிடையாது. நாவுக்கு வறுமை இல்லை".
பாடல்
ஆவிற் கரும்பனி தாங்கிய மாலையும்
கோவிற்குக் கோவல னென்றுலகம் கூறுமால்
தேவர்க்கு மக்கட் கெனல்வேண்டா தீங்குரைக்கும்
நாவிற்கு நல்குர(வு) இல்.
சீர் பிரித்த பின்
ஆவிற்கு அரும் பனி தாங்கிய மாலையும்
கோவிற்குக் கோவலன் என்று உலகம் கூறுமால்
தேவர்க்கு மக்கட்கு எனல் வேண்டா தீங்கு உரைக்கும்
நாவிற்கு நல்குர(வு) இல்.
பொருள்
ஆவிற்கு = பசு கூட்டங்களுக்கு
அரும் பனி = பெரிய மழையில் இருந்து
தாங்கிய = காப்பாற்றிய
மாலையும் = திருமாலையும்
கோவிற்குக் கோவலன் = மாடு மேய்ப்பவன்
என்று உலகம் கூறுமால் = என்று உலகம் கூறியது
தேவர்க்கு = தேவர்களுக்கு (உயர்ந்தவர்களுக்கு)
மக்கட்கு = மக்களுக்கு
எனல் வேண்டா = என்ற பாகு பாடு இல்லாமல்
தீங்கு உரைக்கும் = தீங்கு சொல்லும்
நாவிற்கு = நாக்கிற்கு
நல்குர(வு) இல் = வறுமை என்பது கிடையாது.
அரும் பனி = பெரிய மழையில் இருந்து
தாங்கிய = காப்பாற்றிய
மாலையும் = திருமாலையும்
கோவிற்குக் கோவலன் = மாடு மேய்ப்பவன்
என்று உலகம் கூறுமால் = என்று உலகம் கூறியது
தேவர்க்கு = தேவர்களுக்கு (உயர்ந்தவர்களுக்கு)
மக்கட்கு = மக்களுக்கு
எனல் வேண்டா = என்ற பாகு பாடு இல்லாமல்
தீங்கு உரைக்கும் = தீங்கு சொல்லும்
நாவிற்கு = நாக்கிற்கு
நல்குர(வு) இல் = வறுமை என்பது கிடையாது.
வறுமையை "நல்"குரவு என்று சொல்வது ஏன்? "நல்" என்பதன் பொருள் என்ன?
ReplyDeleteகடைசி வரி நன்றாக இருக்கிறது.
நன்றி.