இராமாயணம் - தாரையின் ஆளுமை
கோபத்தோடு வரும் இலக்குவனை சந்திக்க தாரை தன் தோழிகளோடு செல்கிறாள்.
எப்படி ?
அந்த பெண்கள் எப்படி இருந்தார்கள்.....
பாடல்
விலங்கி மெல்லியல் வெள்நகை வெள்வளை
இலங்கு நுண்ணிடை ஏந்து இள மென்முலை
குலம்கொள் தோகை மகளிர் குழாத்தினால்
வலம்கொள் வீதி நெடுவழி மாற்றினாள்.
பொருள்
விலங்கி = பார்பவரை விலங்கிட்டு, அங்கிங்கு நகர விடாத அழகு
மெல்லியல் = மென்மையானவர்கள்
வெள்நகை = வெண்மையான புன்னகை. பளிசென்ற வெண்மையான பற்கள் தெரியும்படியான புன்னகை
வெள்வளை = வெண்மையான வளையல். சங்கு வளையல்
இலங்கு நுண்ணிடை = விளங்கும் நுண்ணிய இடை
ஏந்து இள மென்முலை = ஏந்திய இளமையான மார்புகள்
குலம்கொள் = நல்ல குலத்தில்
தோகை மகளிர் குழாத்தினால் = மயில் போன்ற பெண்களின் கூட்டத்தினால்
வலம்கொள் வீதி = வலம் வரும் வீதியின்
நெடுவழி மாற்றினாள் = இலக்குவன் வரும் வழியை மாற்றினாள், தடுத்தாள்
ஆணின் கோபத்தை, மூர்கத்தை மாற்றும் இயல்பு பெண்மைக்கு உண்டு. அனுமனோ, அங்கதனோ சென்றிருந்தால் நிலை வேறு மாதிரி இருந்திருக்கும்.
இலக்குவன் பெண்ணிடம் வீரத்தை காண்பிக்க மாட்டான். அவன் கோபம் மட்டுப் படும் என்று நினைத்து அனுமன் தாரையை அனுப்பினான்.
பின் வரும் பாடல்களில் தாரையின் பேச்சு சாதுரியத்தை, இலக்குவனின் மிக உயர்ந்த ஒழுக்கத்தை காட்டுகிறான் கம்பன்.
பார்ப்போம்.
No comments:
Post a Comment