கம்ப இராமாயணம் - கரு நாயிறு போல்பவர்
"இத்தனை நாள் என்னோடு ஒன்றாக இருந்தாயே என் மனமே. ஒரு நாள் கூட என்னை விட்டு நீ பிரிந்தது இல்லை. என்னோடு சேர்ந்து என் இன்ப துன்பங்களை அனுபவித்தாய். ஆனால், நேத்து வந்த இராமனைப் பார்த்தவுடன், என்னை விட்டு விட்டு அவன் பின்னால் போய் விட்டாய். இனி அவன் எப்ப வருவானோ, அப்ப அவனோடு தான் நீ வருவாய் போல் இருக்கிறது. உன்னைப் போல ஒரு நன்றி கெட்ட ஆளை நான் பார்த்ததே இல்லை"
என்று சீதை தன் மனதுக்குச் சொல்கிறாள்.
பாடல்
கரு நாயிறு போல்பவர் காலொடு போய்.
வரு நாள். அயலே வருவாய்;- மன்னே!-
பெரு நாள். உடனே. பிரியாது உழல்வாய்;
ஒரு நாள் தரியாது ஒழிவார் உளரோ?
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2021/01/blog-post_3.html
click the above link to continue reading
கரு நாயிறு = கருமையான ஞாயிறு
போல்பவர் = போல அவர்
காலொடு போய். = திருவடிகளை பற்றிக் கொண்டு
வரு நாள் = அவர் திரும்பி வருகின்ற நாள்
அயலே வருவாய் = வெளியே சென்ற நீ வருவாய்
மன்னே!- = என் மனமே
பெரு நாள் = ரொம்ப நாள்
உடனே = கூடவே இருந்து
பிரியாது = பிரியாமல்
உழல்வாய்; = என்னோடு சேர்ந்து சுற்றிக் கொண்டு இருந்தாய்
ஒரு நாள் தரியாது = ஒரே நாளில் என்னோடு இல்லாமல்
ஒழிவார் உளரோ? = விட்டு விட்டுப் போய் விட்டாய். அப்படி செய்பவர்கள் கூட இருக்கிறார்களா?
ஜொள்ளு விடுறதுக்கு இவ்வளவு பில்ட் - அப்பா?
சீதையின் ஜொள்ளு மிக இனிமையாகத்தான் இருக்கிறது!
ReplyDelete"கம்பராமாயணத்தில் ஜொள்ளு" என்ற தலைப்பில் ஒரு புத்தகமே எழுதலாம் போல இருக்கிறது!
ReplyDelete