பெரிய புராணம் - இயற்பகை நாயனார் - பாகம் 1
https://interestingtamilpoems.blogspot.com/2024/03/1.html
நமக்கு தெரிந்து பக்தர்கள் இறைவனை நோக்கி ஓலம் இட்டு அழைத்து கேட்டு இருக்கிறோம்.
"சிவனே சிவனே என்று ஓலம் இடினும்" என்பார் மணிவாசகர்.
மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே சிவனே என்(று)
"ஓலம்" இடினும் உணராய் உணராய் கான்
ஏலக்குழலி பரிசு ஏலோர் எம்பாவாய்.
இறைவனே பக்தனை நோக்கி ஓலம் இட்டு, ஒரு முறை அல்ல, பல முறை ஓலம் இட்டு கூப்பிட்ட கதை தெரியுமா?
அதுதான் இயற்பகை நாயனார் கதை.
இப்படியும் கூட ஒரு பக்தியா என்று வியக்க வைக்கும் பக்தி.
கண்ணில் நீரை வரவழைக்கும் பக்தி.
சிவ பெருமானின் அடியார்களை தொகுத்து சுந்தர மூர்த்தி நாயனார் ஒரு நீண்ட பட்டியல் தந்து இருக்கிறார். அந்த நீண்ட நெடிய பட்டியலில் மூன்றாவது இடம் இயற்பகை நாயனாருக்கு. அப்படி என்றால் அவரின் சிறப்பு தெரியும்.
தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்
வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்
விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டர்க் கடியேன்
அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே
இயற்பகை நாயனாரின் கதை அப்புறம் எழுதவே இல்லையே?
ReplyDelete