Saturday, October 13, 2012

அபிராமி அந்தாதி - நினைத்தாலும், மறந்தாலும்


அபிராமி அந்தாதி - நினைத்தாலும், மறந்தாலும்


நாம் எப்போது இறைவனை நினைக்கிறோம்...துன்பம் வரும்போது அவனை நினைக்கிறோம். சில சமயம் சந்தோஷம் வந்தால் அவனை நினைக்கிறோம். அவனிடம் ஏதாவது வேண்டுகிறோம். அப்படி இல்லாவிட்டால், அவனுக்கு நன்றி சொல்லவாவது கோவிலுக்குப் போகிறோம். 

அபிராமி பட்டர் சொல்கிறார், " அபிராமி, உன்னை நினைத்தாலும் சரி, மறந்தாலும் சரி, உன்னிடம் கேட்பதற்கு ஒன்றும் இல்லை என்கிறார். 

அவளும் நானும் வேறாய் இருந்தால் என்னிடம் இல்லாத ஒன்றை அவளிடம் கேட்கலாம். அவளும் நானும் ஒன்று என்று ஆனபின், எதைக் கேட்பது ? 



அந்த அற்புதப் பாடல்:


மின் ஆயிரம் ஒரு மெய் வடிவு ஆகி விளங்குகின்றது 
அன்னாள், அகம் மகிழ் ஆனந்தவல்லி, அருமறைக்கு 
முன்னாய், நடு எங்கும் ஆய், முடிவு ஆய முதல்விதன்னை 
உன்னாது ஒழியினும், உன்னினும், வேண்டுவது ஒன்று இல்லையே.

பொருள் 

மின் ஆயிரம் = ஆயிரம் மின்னல்கள் 

ஒரு மெய் வடிவு ஆகி = ஒரு உருவம் ஆகி


விளங்குகின்றது = விளங்குகின்றது  

அன்னாள், = அவள்

அகம் மகிழ் ஆனந்தவல்லி, = அவளை நினைக்கும் போது எல்லாம் 
உள்ளுக்குள் ஆனந்தம் பொங்கி வரும்

அருமறைக்கு  = அரிய வேதங்களுக்கு

முன்னாய்,= அதற்க்கு முன்னால்

நடு எங்கும் ஆய், = நடுவாய்

முடிவு ஆய = அவற்றின் முடிவாய்

முதல்விதன்னை = எல்லாவற்றிற்கும் முதல்வி ஆனவளை

உன்னாது ஒழியினும், = நினைக்காமல் விட்டாலும்


உன்னினும்,= நினைத்தாலும்

வேண்டுவது ஒன்று இல்லையே. = அவளிடம் வேண்டுவது ஒன்றும் இல்லை

1 comment:

  1. "அபிராமி அந்தாதி"யின் அன்னியோன்னியம் இப்போது புரிகிறது.

    ReplyDelete