Tuesday, October 30, 2012

திருவிளையாடல் புராணம் - மாணவன் இலக்கணம்


திருவிளையாடல் புராணம் - மாணவன் இலக்கணம் 


மாணவன் எப்படி படிக்க வேண்டும் ? ஒரு பாடத்தை ஒரு ஆசிரியரிடம் மட்டும் கேட்டுத் தெரிந்தால் போதாது. அந்த பாடத்தைப் பற்றி நண்பர்களிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும். ஒரு புத்தகம் மட்டும் படித்தால், ஒரே பாடத்தை இரண்டு மூணு புத்தகங்களில் படிக்க வேண்டும், துணை பாடல் நூல் (நோட்ஸ் ) இருந்தால் அதை பார்க்க வேண்டும். இன்டெர் நெட் இருந்தால், அதில் அந்த பாட சமந்தமாய் என்ன இருக்கிறது என்று தேட வேண்டும். இப்படி பல வழிகளில் அறிவை பெற்ற பின், கர்வம் இல்லாமல், தான் பெற்ற அறிவால் மற்றவர்களுக்கு இதமான சுகம் தர வேண்டும்...

இதற்கு ஒரு உதாரணம் தருகிறார் பரஞ்சோதியார்...திரு விளையாடார் புராணத்தில்...

தென்றல் காற்று இருக்கிறதே...அது முதலில் ஒரு பூங்காவுக்குள் போகும். அங்கே உள்ள மலர்களின் நறுமணத்தை எடுத்துக் கொள்ளும். அப்படியே பக்கத்தில் உள்ள குளத்தில் குதித்து கொஞ்சம் குளிர்ச்சியை எடுத்துக் கொள்ளும். அந்த குளத்தில் உள்ள தாமரை மலரை தொட்டு தடவி அதன் மணத்தையும் தேனையும் எடுத்துக் கொள்ளும். பின் அங்கிருத்து கிளம்பிப் போய் மல்லிகை, இருவாட்சி, முல்லை போன்ற மலர்களின் நறுமணத்தை எடுத்துக் கொள்ளும்...இப்படி குளிர்ச்சியையும், நறு மணத்தையும், தேனையும் சுமந்து கொண்டு இதமாக வீசும் தென்றல் காற்று ... பல பல இடங்களில் சென்று பலவிதமான அறிவை பெரும் மாணவனை போல் இருக்கிறதாம்.....

பாடல்

பொங்கரி னுழைந்து வாவி புகுந்துபங் கயந்து ழாவிப்
பைங்கடி மயிலை முல்லை மல்லிகைப் பந்தர் தாவிக்
கொங்கலர் மணங்கூட் டுண்டு குளிர்ந்துமெல் லென்று தென்றல்
அங்கங்கே கலைக டேரு மறிவன்போ லியங்கு மன்றே.



பொங்கரி னுழைந்து = பொங்கரில் நுழைந்து = சோலையில் நுழைந்து

வாவி புகுந்து = குளத்திற்குள் புகுந்து

பங் கயந்து ழாவிப் = தாமரை மலரை தடவி

பைங்கடி = பசுமையான

மயிலை = இருவாட்சி (ஒரு வித மலர்)

முல்லை = முல்லைபூ

மல்லிகைப் = மல்லிகை பூ

பந்தர் தாவிக் = பந்தல் எல்லாம் தாவி தாவி சென்று

கொங்கலர் = மகரந்தங்களை கொண்டு மலர்ந்த பூக்களின் 

மணங்கூட் டுண்டு = நறுமணங்களை சேர்த்து எடுத்துக் கொண்டு

குளிர்ந்து = குளிர்ச்சியுடன்

மெல் லென்று = மென்மையாக


தென்றல் = வீசும் தென்றலானது

அங்கங்கே = பல இடங்களில்

 கலைக டேரு = கலைகள் + தேறி = கலைகளில் தேர்ச்சி பெற்று 

மறிவன்போ லியங்கு மன்றே.= அறிவன் + போல் + இயங்கும் + அன்றே = அறியும் மாணவைப் போல் இயங்கும் 

4 comments:

  1. பாட்டுநா இப்படி இருக்கணு. படித்ததும் ஒரு சுகம, ஒரு புன்னகை வரவழைக்கும் பாடல். thanks for bringing such gems for us.

    ReplyDelete
  2. good one.Personal Experience
    a!!!

    ReplyDelete
  3. தென்றலுக்கு மாணவன் உவமையா, அல்லது மாணவனுக்குத் தென்றல் உவமையா?! எப்படி இருந்தாலும் அற்புதம்.

    ReplyDelete
  4. என் அம்மா என்னைக் குறித்து சொன்ன பாடல்... அவள் இல்லாத இந்நாளில் என்மனப்பாலையில் தென்றலாக இப்பாடலும் அதன் பொருளும் - அறிவன்

    ReplyDelete