Sunday, February 3, 2013

ஆத்திச் சூடி - உடையது விளம்பேல்


ஆத்திச் சூடி - உடையது விளம்பேல் 


வாழ்க்கை மாறிக்கொண்டே இருப்பது 

இன்று நண்பர்களாய் இருப்பவர்கள் நாளை வேறு மாதிரி மாறலாம்

இன்றைய உறவு   நாளைய   பகையாக மாறலாம்.

யார் யாரோடு எப்போது சேருவார்கள் என்று தெரியாது. 

நபர்கள் என்று நாம் எதையாவது சொல்லப் போக, நாளை அவர்கள் வேறு மாதிரி மாறிவிட்டால் கஷ்டம் தான். 

நம் நண்பர்கள் நம் எதிரிகளோடு கை கோர்த்து கொள்ளலாம். 

சில பேர் வீடு வேலைக்காரியிடம், வண்டி ஓட்டும் டிரைவரிடம், கடை காரரிடம் என்று எல்லோரிடமும் எல்லாவற்றையும் சொல்லி வம்பில் மாட்டிக் கொள்வார்கள் 

பெண்ணுக்கோ பையனுக்கோ வரன் பார்த்தால் நிச்சயம் ஆகும் வரை வெளியே சொல்ல மாட்டார்கள். நடுவில் யாரவது புகுந்து எதையாவது சொல்லி சம்பந்தத்தை கலைத்து விடலாம் எதுக்கு வம்பு. 



பொதுவாக யாரிடமும் அளவுக்கு அதிகமாக உள்ளதை சொல்வதை தவிர்ப்பது நலம் பயக்கும் 

உடையது விளம்பேல் என்றாள்  ஔவை  பாட்டி 

உன்னிடம் உள்ளதை பிறரிடம் சொல்லாதே....

அது சொத்து பற்றிய விவரமாய் இருக்கலாம், நட்பு, பகை, காதல் பற்றிய உறவை இருக்கலாம், நோய் பற்றிய சொந்த விஷயமாக இருக்காலாம். 

தோழனோடாயினும்  ஏழ்மை பேசேல் 

சொல்லாத சொல்லுக்கு நாம் அதிகாரி 
சொல்லிய சொல் நமக்கு அதிகாரி 

யோசித்துப் பேசுங்கள். குறைவாகப் பேசுங்கள். யாரிடம் எதை சொல்கிறோம் என்று அறிந்து பேசுங்கள்.


2 comments:

  1. "உடையது" என்ற சொல்லுக்கு, சொத்து என்ற பொருள் மட்டும் இல்லாமல், இன்னும் விரிந்த பொருள் கொடுக்க முடியும் என்று விளக்கியிருப்பது இனிமை. நன்றி.

    ReplyDelete
  2. மொத்தத்தில் "பேச்சை குறைடா" என்று ஔவை சொன்னதை நன்றாக எழுதி இருக்கிறீர்கள். நன்றி.

    ReplyDelete