நீத்தல் விண்ணப்பம் - அமுதப் பெரும் கடலே
தண்ணீருக்காக எவ்வளவோ கஷ்டப் படுகிறோம்.
இந்த கடல் நீர் அனைத்தும் நல்ல நீராக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் ?
அதுவும் தெளிந்த சுத்தமான நீராக இருந்தால் ?
தண்ணீரை விடுங்கள், கடல் முழுவதும் அமுதமாக இருந்தால் ?
அமுதம் கொஞ்சம் கிடைத்தால் கூட போதும். அது கடல் அளவு இருந்தால் ? இறைவனின் அருள், அன்பு, கடல் போல நம் முன்னால் விரிந்து கிடக்கிறது.
இருந்தும் நான் அதை விட்டு விட்டு என் புலன்கள் தரும் சிற்றின்பங்களின் பின்னால் அலைகிறேனே , இருந்தும் என்னை கை விட்டு விடாதே என்கிறார் மாணிக்க வாசகர்.
மனிதனுக்குள் நித்தம் நடக்கும் போராட்டத்தை விளக்குகிறார் மணிவாசகர்.
ஒரு புறம் இறை உணர்வு உந்தித் தள்ளுகிறது. மறுபுறம் புலன் ஆசைகள் பற்றி இழுக்கின்றன. இதையும் விட முடியவில்லை, அதையும் விட முடியவில்லை.
தவிப்பு தொடர்கிறது.
பாடல்
நெடுந்தகை, நீ, என்னை ஆட்கொள்ள, யான், ஐம் புலன்கள் கொண்
விடும் தகையேனை விடுதி கண்டாய்? விரவார் வெருவ,
அடும் தகை வேல் வல்ல உத்தரகோசமங்கைக்கு அரசே,
கடும் தகையேன் உண்ணும் தெள் நீர் அமுதப் பெரும் கடலே.
பொருள்
நெடுந்தகை = பெருந்தன்மை கொண்டவனே
நீ = நீ
என்னை ஆட்கொள்ள = நீ என்னை ஆட்கொண்ட பின்பும்
யான் = நான்
ஐம் புலன்கள் = என் ஐந்து புலன்களும்
கொண் விடும் தகையேனை = கொண்டு செல்லும் வழியில் செல்லும் தன்மை
உடையவனாய் இருக்கிறேன்
விடுதி கண்டாய்? - இருந்தும் என்னை கை விட்டு விடாதே
விரவார் வெருவ = பகைவர்கள் அஞ்சும்படி
அடும் = சண்டை இடும்
தகை வேல் வல்ல = வல்லமை பொருந்திய வேலைக் கொண்ட
உத்தரகோசமங்கைக்கு அரசே = உத்தரகோசமங்கைக்கு அரசே
கடும் தகையேன் = கடுமையான தன்மை கொண்ட நான்
உண்ணும் = உண்ணும்
தெள் நீர் = தெளிந்த நீர்
அமுதப் பெரும் கடலே = அமுதம் நிறைந்த பெரும் கடலே

No comments:
Post a Comment