இராமாயணம் - வயிற்றில் அடக்கியவனை வயிற்றில் அடக்கியவள்
இராமனுக்கு முடி சூட்டப் போகிறார்கள் என்ற செய்தி வந்தது. கோசலைக்கு அளவிட முடியாத மகிழ்ச்சி. எல்லோருக்கும் தானம் தர்மம் எல்லாம் செய்தாள். பின் கோவிலுக்கு சென்று இராமனுக்காக பிரார்த்தனை செய்கிறாள்.
பிராரர்த்தனை செய்தது யார் ?
இந்த அகிலத்தை எல்லாம் தன் வயிற்றில் அடக்கிய திருமாலை தன் வயிற்றில் அடக்கியவள்.
அவளின் தவம் தான் எத்துணை சிறந்தது ?
பாடல்
என்வயின் தரும் மைந்தற்கு, இனி, அருள்
உன்வயத்தது’ என்றாள் - உலகு யாவையும்
மன்வயிற்றின் அடக்கிய மாயனைத்
தன் வயிற்றின் அடக்கும் தவத்தினாள்.
பொருள்
என்வயின் = என் மூலமாக
தரும் மைந்தற்கு = பிறந்த பிள்ளைக்கு
இனி = இனிமேல்
அருள் = அருள்வது
உன்வயத்தது’ = உன் கடமை
என்றாள் = என்றாள்
உலகு யாவையும் = உலகம் அனைத்தையும்
மன்வயிற்றின் = சிறந்த வயிற்றின் (தம்மில் தம்மக்கள் அறிவுஉடைமை மாநிலத்து
மன்உயிர்க்கு எல்லாம் இனிது, என்பது வள்ளுவம்). மன் என்பதற்கு நிரந்தரமானது என்று ஒரு பொருள் உண்டு. மன்வயிற்றின் என்றால் நிரந்தரமான வயிறு. என்றும் உள்ளது.
அடக்கிய மாயனைத் = அடக்கிய மாயனை
தன் வயிற்றின் = தன்னுடைய வயிற்றில்
அடக்கும் தவத்தினாள்.= அடக்கி வைத்திருந்த பெருந்தவம் உடையவள்
கோசலைக்கு அளவு கடந்த மகிழ்ச்சிதான் என்றால், ஒரு சின்ன நெருடல், ஒரு சின்ன சோகம் மனத்திற்குள்...
கைகேகிக்கு இல்லாத சோகம், கூனிக்கு இல்லாத சோகம் கோசலைக்கு வந்தது....
அது என்ன சோகம் தெரியமா ?
என்ன?
ReplyDelete