Monday, December 17, 2012

பட்டினத்தார் - உருகும் மொழி


பட்டினத்தார் - உருகும் மொழி


உபதேசம். பட்டினத்தார், அருணகிரியார், மாணிக்க வாசகர் என்று எல்லோரும் அவர்களுக்கு இறைவன் உபதேசம் பண்ணியதாகவே சொல்கிறார்கள். அருணகிரியார் ஒரு படி மேலே போய், முருகன் தனக்கு உபதேசம் மட்டும் அல்ல ஜெப மாலையும் சேர்த்து தந்ததாக கூறுகிறார் ("ஜெப மாலை தந்த சற் குருநாதா, திருவாவினன் குடி பெருமாளே).

இங்கே பட்டினத்தார் தனக்கு இறைவன் உபதேசம் செய்ததாக கூறுகிறார். அந்த உபதேச மொழியையை கேட்டால் ...



மண்ணும் உருகும் மரம் உருகும் மாயை உருகும் மால்உருகும் 
பெண்ணும் உருகும் ஆண் உருகும் பேதாபேத வகை உருகும் 
அண்ணல் உருகும் இடத்தமர்த்த ஆத் தாள் உருகும் அரவணையான் 
எண்ணி உருகும் குருநாதன் என்பால் உரைத்த ஓர் மொழியே.


பொருள் 

மண்ணும் உருகும் = மண்ணும் உருகும்

மரம் உருகும் = மரம் உருகும்

மாயை உருகும் = இந்த மண்ணு, மரம் என்று தோற்றம் அளிக்கும் மாயையை உருகும்

மால்உருகும் = ஆசை உருகும்

பெண்ணும் உருகும் ஆண் உருகும் = பெண்ணும் ஆணும் உருகும்

பேதாபேத வகை உருகும் = பெண், ஆண்; உயர்ந்தவன், தாழ்ந்தவன்; போன்ற பேதங்கள் மறையும்

அண்ணல் உருகும் = அண்ணலாகிய சிவன் உருகுவான்

இடத்தமர்த்த ஆத் தாள் உருகும் = அவனுடைய இடப் பாகத்தில் அமர்ந்த சிவகாமி உருகுவாள்

அரவணையான் = பாம்பணை மேல் உறங்கும் திருமால் 
 
எண்ணி உருகும் = நினைத்து உருகுவான்

 குருநாதன் என்பால் உரைத்த ஓர் மொழியே.= குருநாதன் எனக்கு உபதேசித்த ஒரு மொழியே 

இப்படி உயிர் உள்ளவை, உயிர் இல்லாதவை, ஆண், பெண், என்று எல்லாம் உருகும் படி சொன்ன அந்த ஒரு மொழி என்னவாக இருக்கும் ?


1 comment:

  1. Wow!!! அந்த ஒரு மொழியை சொல்லி இருக்க கூடாதா? நம்மளும் உருகலாம்ல. பரவா இல்லை இந்த பாட்டே போதும். சும்மா உர்க்குது.

    ReplyDelete