பெரிய புராணம் - அன்பினால் வணங்கினார்
ஒரு நாள் இறைவன் பக்தன் முன் தோன்றி, "பக்தா, உன் பக்திக்கு மெச்சினோம், உனக்கு என்ன வேண்டுமோ கேள்" என்றான்.
பக்தன்: ஒண்ணும் வேண்டாம் இறைவா
இறைவன்: என்ன, ஒண்ணும் வேண்டாமா ?
பக்தன்: ஆம், ஒண்ணும் வேண்டாம்.
இறைவன்: உனக்கு எவ்வளவு செல்வம் வேண்டுமானாலும் தருகிறேன்...கேள்
பக்தன்: தங்கமும், வைர வைடூரிய செல்வங்களும், வீடு கட்டும் ஓடும் ஒண்ணு தான் எனக்கு. அதெல்லாம் வேண்டாம் இறைவா.
இறைவன்: ஹ்ம்ம்...சரி அதை விடு, உனக்கு சொர்க்கம் வேண்டுமா...தருகிறேன்.
பக்தன்: அதுவும் வேண்டாம்
இறைவன்: ஒண்ணுமே வேண்டாம் என்றால், பின்ன எதற்க்காக என்னை வணங்குகிறாய்?
பக்தன்: ஓ...அதுவா...எனக்கு உன் மேல் அன்பு, காதல்....உன்னை வணங்கனும் போல இருந்தது...மத்தபடி எனக்கு ஒண்ணும் வேண்டாம்....
பாடல்:
கேடு மாக்கமுங் கெட்ட திருவினார்
ஓடுஞ் செம்பொனும் ஒக்கவே நோக்குவார்
கூடும் அன்பினில் கும்பிட லேயன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்கினார்.
பொருள்;
கேடு மாக்கமுங் = கேடும் + ஆக்கமும் = நல்லதும், கெட்டதும்
கெட்ட திருவினார் = இல்லாத சிறந்தவர்கள். இன்ப துன்பத்திற்கு அப்பாற்பட்டவர்கள்
ஓடுஞ் = வீடு கட்டும் ஓடும்
செம்பொனும் = செம்மையான பொன்னும் (தங்கம்)
ஒக்கவே நோக்குவார் = ஒன்றாக நினைப்பார்கள்
கூடும் அன்பினில் = மனதில் கூடி வரும் அன்பினால்
கும்பிட லேயன்றி = கும்பிடுவார்களே அன்றி
வீடும் = வீடு பேறும் (சொர்கமும்)
வேண்டா = வேண்டாத
விறலின் = வெற்றியில்,
விளங்கினார் = இருந்தார்கள்.
அன்பே சிவம்......
என்ன ஒரு காதல்!!!. இப்படி கூட பக்தி செய்ய முடியுமா என்ன?!!
ReplyDeleteஉனக்கு எப்படி இத்தனை பாடல்கள் கிடைக்கின்றன?!
ReplyDeleteஎப்படியோ, இதைப் படிக்கும் நாங்கள் அதிருஷ்டசாலிகள்!
தமிழ் இலக்கியம் கடல் போல் விரிந்து கிடக்கிறது. நான் ஏதோ அதன் கரையில் சில பல சிப்பிகளையும் சங்குகளையும் பொருக்கி எடுத்து உங்களிடம் காட்டி சந்தோஷப் பட்டு கொண்டிருக்கிறேன்...:)
Deleteஉண்மை. திரு ரெத்தின் அவர்களால் இந்த தொகுப்பினை அனுபவிக்கும் நாம் அதிஷ்டசாலிகள்.
Delete