Tuesday, December 18, 2012

திருக்குறள் - விரும்பும் பொழுது


திருக்குறள் - விரும்பும் பொழுது


நாம் ஒன்றை அடைய விரும்பும் போது அந்த ஒன்றின் மேல் நமக்கு மிகுந்த விருப்பம் உண்டாகும். அது வீடு, தொலைக்காட்சி பெட்டி, புது கைபேசி, நகை, புடவை, உணவு, பார்க்க விரும்பும் இடம் என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஏன், அது இன்னொரு உயிராகக் கூட இருக்கலாம்...ஆணோ, பெண்ணோ...அவர்களை நாம் விரும்பும் போது அவர்கள் மேல் அளவு கடந்த அன்பும், ஆசையும், ஆர்வமும் உண்டாகும். 

அப்படி நாம் விரும்பும் பொருள் கையில் கிடைத்து விட்டால், அதன் மேல் உள்ள ஆர்வம் கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து சில சமயம் அதன் மேல் வெறுப்பு கூட வரலாம். 

நாம் விரும்பும் ஒரு பொருள் நமக்கு எப்ப எப்ப தேவை படுகிறதோ அப்பப்ப நமக்கு கிடைத்தால், நமக்கு எவ்வளவு சந்தோசமாய் இருக்குமோ 

பாடல் 


வேட்ட பொழுதின் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள்

பொருள்



வேட்ட பொழுதின் = ஆசைப் பட்ட போது, வேண்டிய போது

அவையவை போலுமே = அந்தந்த பொருள்கள். வள்ளுவர் அவை என்று பொதுவாகக் குறிப்பிடுகிறார். ஆசைபடும் எதுவும் அந்த "அவை" யில் அடங்கும். அவையவை போலுமே என்றால், அவை ஆசைப் பட்ட போது வந்ததைப் போல 

தோட்டார் = தோடும் + ஆரமும் = கம்மலும், மாலையும்

கதுப்பினாள் = கதுப்பு என்றால் கூந்தல். 

 தோள் = கூந்தல் புரளும் தோள்

வேண்டியவை நமக்கு நினைத்த நேரத்தில் கிடைத்தால் எவ்வளவு சந்தோஷமாக இருக்குமோ, அவ்வளவு சந்தோஷம் கம்மலும், மாலையும் அணிந்த அவளின் கூந்தல் புரளும் தோள்கள்....அதாவது அந்த தோளோடு சேர்வது என்று பொருள் கொள்க


1 comment:

  1. There is some internal contradiction here, right?

    The girl may also become tiresome after some time, right?

    ReplyDelete