திரு அருட்பா - நான் வஞ்ச நெஞ்சன், நீயுமா ?
எனக்குத் தான் வஞ்ச நெஞ்சம்...உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுகிறேன், பொய் சொல்கிறேன், புறம் சொல்கிறேன்...ஆனால் இறைவா இதை எல்லாம் மனதில் வைத்துக் கொண்டு நீயும் எனக்கு வஞ்சனை செய்தால் நான் என்ன செய்வேன் ? எங்கு போவேன் ? நீயே சொல்லு.
பாடல்
ஆயும் வஞ்சக நெஞ்சன்இவ் அடியனேன் ஐயா
நீயும் வஞ்சக நெஞ்சன்என் றால்இந்த நிலத்தே
ஏயும் இங்கிதற் கென்செய்வேன் என்செய்வேன் எவைக்கும்
தாயும் தந்தையும் ஆகிஉள் நிற்கின்றோய் சாற்றாய்.
பொருள்
ஆயும் = ஆராய்ந்து பார்த்தால்
வஞ்சக நெஞ்சன் = வஞ்சக நெஞ்சன்
இவ் அடியனேன் ஐயா = அடியேனாகிய நான்
நீயும் = நீயும்
வஞ்சக நெஞ்சன்என் றால் = வஞ்சக நெஞ்சன் என்றால்
இந்த நிலத்தே = இந்த உலகில்
ஏயும் இங்கிதற் = அதற்காக இங்கு
கென்செய்வேன் என்செய்வேன் = என்ன செய்வேன், என்ன செய்வேன்
எவைக்கும் = எல்லாவற்றிற்கும்
தாயும் தந்தையும் = தாயும் தந்தையும்
ஆகிஉள் நிற்கின்றோய் = ஆகி, உள் நின்றாய்
சாற்றாய் = நீயே சொல்லு
அருமையான, நூதனமான (innovative) கற்பனை இது!
ReplyDelete