திருஅருட்பா - nuclear physics
திரு அருட்பாவில் சில ஆச்சரியமான பாடல்கள்.
பரந்து விரிந்த இந்த உலகம் எல்லாம் ஒரு பெரு வெடிப்பில் (Big Bang ) இருந்து வந்தது என்று அறிவியல் சொல்கிறது.
ஆதியில் இருந்தது ஒரே விதமான பொருள். அதை அறிவியல் cosmic soup என்கிறது. சூடான காற்றும், தூசியும் கலந்த ஒரு விதமான பொருள். மிக மிக பெரிய சக்தியின் வடிவம். ஒரே ஒளிக் கோளம். இருள் என்பதே கிடையாது. அதில் இருந்து அணுக்கள் (atoms ) பிறந்தன. அந்த அணுக்களுக்குள் ஒரு கரு...அணுக்கரு. அந்த அணு கருவுக்குள் அணு சக்தி (nuclear force or atomic force ). இத்தனையும் எப்படி வந்தது என்று சொல்ல வருகிறார் வள்ளலார்.
quantum mechanics என்ற வார்த்தை கூட இல்லாத அந்த காலத்தில் எழுதப்பட்டது இந்தப் பாடல்....
பாடல்
தோற்றம் ஒன்றே வடிவொன்று வண்ணம் ஒன்று விளங்கும்
சோதி ஒன்று மற்றதனில் துலங்கும் இயல் ஒன்று
அற்ற அதில் பரமாய அணு ஒன்று பகுதி
அது ஒன்று பகுதிக்குள் அமைந்த கரு ஒன்று
ஏற்ற மிக்க அக்கருவுள் அமைந்த சக்தி ஒன்று சத்திக்
கிறை ஒன்றாம் இத்தனைக்கும் என் கணவர் அல்லால்
ஆற்ற மற்றோர் அதிகாரி இல்லையடி மன்றில்
ஆடும் அவர் பெருந்தகைமை யார் உரைப்பார் தோழி”
பொருள்
தோற்றம் ஒன்றே = அதன் தோற்றம் ஒன்றே. இது எல்லாம் அந்த ஒன்றில் இருந்து தான் வந்தது
வடிவொன்று = அதன் வடிவம் ஒன்று தான்
வண்ணம் ஒன்று = அந்த ஆதி மூலத்தின் வண்ணம் ஒன்று தான்
விளங்கும் சோதி ஒன்று = அதில் இருந்து கிளம்பிய ஒளிப் பிழம்பு ஒன்று
மற்றதனில் துலங்கும் இயல் ஒன்று = அதன் இயல்பு ஒன்று
அற்ற அதில் = ஆதியான அதில்
பரமாய அணு ஒன்று = ஆதி அணு ஒன்று
பகுதி அது ஒன்று = அதைப் பிரித்தால், அதன் பகுதியும் ஒன்று
பகுதிக்குள் அமைந்த கரு ஒன்று = அணுவுக்குள் அமைந்த கரு ஒன்று
ஏற்ற மிக்க = சக்தி வாய்ந்த
அக்கருவுள் = அந்த அணுக் கருவில்
அமைந்த சக்தி ஒன்று = உள்ள அணு சக்தி ஒன்று
சத்திக் கிறை = அணு சக்த்தியையை தோற்றிவைத்த இறைவனும்
ஒன்றாம் = ஒருவனே
இத்தனைக்கும் = இவை அத்தனைக்கும்
என் கணவர் அல்லால் = என் கணவனாகிய இறைவன் அல்லாமல்
ஆற்ற மற்றோர் அதிகாரி = செய்யக் கூடிய இன்னொரு ஆள்
இல்லையடி = இல்லை
மன்றில் = மன்றத்தில்
ஆடும் அவர் பெருந்தகைமை = ஆடும் அவரின் பெருமைகளை
யார் உரைப்பார் தோழி = யாரால் சொல்ல முடியும்
என்னால் நம்ப முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை.
இது மட்டும் அல்ல ..இன்னும் அறிவியல் சார்ந்த கருத்துக்கள் நிறைய இருக்கிறது . இன்னும் வரும்.
இது ஒரு அறிவியல் கருத்தல்ல. மிஞ்சி மிசிப் போனால், "அறிவியல் கற்பனை" (science fiction போல) என்று சொல்லலாம். அவ்வளவுதான்.
ReplyDeleteஅறிவியல் என்பது, ஒரு சரியான விளக்கக் கொள்கையுடன் (explanatory principle), மீண்டும் செய்யக்கூடிய (repeatable) பரிசோதனையை அடிப்படையாகக் கொண்டு, எதிர்காலத்தைப் பற்றி முன் முடிவு (forecast) சொல்ல வேண்டும். அப்படி இல்லாத, இந்த மாதிரிப் பாடல் சும்மா கற்பனை என்றே சொல்ல வேண்டும்.
You can see these truths if you raise yourself to Vallalar Stature..
Deleteதற்போதய அனைத்து அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும் ஆதாரம் யாரோ ஒருவருடைய கற்பனைதானே. கற்பனையில் தோன்றிய ஒன்றைத்தான் அறிவியலைகொண்டு சோதித்து உலகம் ஏற்றுக்கொள்ளும் வகையில் அறிமுகம் செய்யப்படுகிறது. இதன்படி வள்ளலாரின் கற்பனையை, அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் தங்களின் கண்டு பிடிப்பால் தற்போது நடைமுறைப்படுத்தி உள்ளார்கள் என்று வைத்துக்குகொள்வோமே. இங்கு வியக்க வேண்டியது, வள்ளலாரின் தீர்க்க தரிசனம்தான்.
ReplyDeleteஎனது தந்தையார் 50 வருடங்களுக்கு முன்பே கூறுவார், கடிகாரத்தில், மணியை முட்கள் மூலமாக தெரிந்து கொள்ளாமல்( Analog) , மணியானது நேரடியாக தெரியும் கடிகாரம் வரவேண்டும் (Digital) என்று. அன்று அது கற்பனைதான். தற்போது அது நடைமுறை.
Nice. Vallalar Vision is intutive and Intution is of higher category than normal intellect.
ReplyDeleteLooks great!
ReplyDeleteHope it is not "Idai cheruhal"!