திருக்குறள் - கேளிர் பிரிப்பர்
மனதால், வாக்கால், உடலால் நாம் காரியம் செய்கிறோம்.
காரியம் செய்யும் போது சில தவறுகள் நிகழ்ந்து விடலாம். அப்படி தவறு நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் அல்லவா?
வாக்கால் என்னென்ன தவறுகள், குற்றங்கள் நிகழலாம்?
நான்கு விதமான குற்றங்களை கூறுகிறார் வள்ளுவர்.
- பொய் சொல்லுதல்
- புறங் கூறுதல்
- கடுஞ் சொல் கூறுதல்
- பயனில சொல் கூறுதல்
இவை நான்கும், வாக்கால் நிகழும் குற்றங்கள். பேசும் போது இந்த குற்றங்கள் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த நாலுக்கும் , நாலு அதிகாரம் எழுதி இருக்கிறார் வள்ளுவர். 40 குறள். அதை மட்டும் படித்து, புரிந்து அதன் படி நடந்தால் நம் பேச்சில் வரும் குற்றங்கள் பெரிதும் தவிர்க்கப்படும்.
இந்த குற்றங்களில் தலையாய குற்றம் பொய் சொல்லுவது.
அடுத்த இடம் புறம் கூறுதலுக்கு.
புறம் கூறுதல் என்றால் என்ன?
பகச் சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச் சொல்லி
நட்பு ஆடல் தேற்றாதவர்
வாக்கால் நிகழக் கூடிய நான்கு தவறுகளை தவிர்க்க ஒரு சமஸ்க்ரித ஸ்லோகம்
ReplyDeleteகீழ் கண்டவாறு சொல்கிறது.கிட்ட தட்ட ஒரே மாதிரி உள்ளது.
உண்மையை பேசு,பிரியமானதை பேசு.:
உண்மையாக இருப்பினும் பிரியமற்றதை பேசாதே,
பிரியமாக இருப்பினும் பொய்யை பேசாதே.