Wednesday, September 7, 2022

கந்தரனுபூதி - மெய்யியல் - பகுதி 1

 கந்தரனுபூதி - மெய்யியல் - பகுதி 1 


நவீன அறிவியல் எது அனைத்துக்கும் அடிப்படை என்று தேடத் தொடங்கியது. பொருள்கள் அனைத்தும் அணுக்களால் ஆனது என்று கண்டு கொண்டது. அணுக்கள் எதனால் ஆனது என்று ஆராய்ந்தபோது அவை ப்ரோடான் , நியுட்ரான், எலெக்ட்ரான் போன்ற துகள்களால் ஆனது என்று அறிந்து கொண்டது. சரி, இந்த துகள்கள் எதனால் ஆனது என்று தேடிய போது பாசிட்றான், போசான், quark போன்ற துகள்களால் ஆனது என்று கண்டு கொண்டது. 


இப்போது நமக்கு இருக்கும் கருவிகளின் துணை கொண்டு இந்த அளவுக்குத்தான் போக முடிந்தது. இன்னும் பெரிய கருவிகள் வந்தால், இந்த தேடல் இன்னும் தொடரும். 


அறிவியல் எது அடிப்படை என்று ஆராய்ந்த போது, மெய்யியல் எது நிரந்தரமானது, அழிவற்றது என்று ஆராய முற்பட்டது. 



https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html

(pl click the above link to continue reading)



பொருள்கள், உயிர்கள் எல்லாம் தோன்றுகின்றன, இருக்கின்றன, பின் மறைந்து விடுகின்றன.இப்படி அல்லாமல்,ஏதாவது ஒன்று தோன்றாமலும், அழியாமலும் இருக்குமா என்று கேள்வி கேட்டுக் கொண்டு அதைக் காண புறப்பட்டது. 


தோன்றியது எல்லாம் அழியும். அப்படி என்றால்,ஒன்று அழியாமல் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்றால் அது தோன்றவும் கூடாது. தோற்றம் இருந்தால் அழிவு இருக்கும். தோன்றாமல் எப்போதும் இருப்பது எது என்று ஆராய்ச்சியை தொடங்கியது. 


அப்படி ஆராய்ந்ததில் தோற்றம் இல்லாத பொருள்கள் மூன்று என்று கண்டு சொன்னது. 


அவற்றிற்கு தோற்றம் இல்லாததால், அவற்றிற்கு அழிவும் இல்லை என்று தெரிந்து கொண்டது. 


அவை எவை?


பதி, பசு, பாசம்.


இந்த மூன்றும் ஆதி அற்றவை.அ-ஆதி= அநாதி.


என்றும் உள்ள பொருள்கள் இந்த மூன்றும்.


அது என்ன பதி, பசு, பாசம் ? 


அவற்றிற்கு உள்ள தொடர்பு என்ன? இவை எப்படி செயல் படுகின்றன என்பதை எல்லாம் ஆராய்ந்து மொத்தம் 36 தத்துவங்களில் அவற்றை தொகுத்தார்கள். 


இதில் சிலவற்றை நாம் சோதித்து அறிந்து கொள்ள முடியும்.  சில தத்துவங்கள் சிந்தனைக்கும், சோதனைக்கும் அப்பாற்பட்டவை. 


இவை எல்லாம் சரி என்று நான் சொல்ல வரவில்லை. 


சரியோ, தவறோ, உண்மையோ, பொய்யோ, நம்புவதோ அல்லது நம்பாமல் விடுவதோ உங்கள் விருப்பம். 


அவை என்ன என்று சொல்லி விடுகிறேன்.  பின் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். 


மேலும் 


இந்த மெய்யியல் என்பது மிக பரந்துபட்டது. ஒரு சில பதிவுகளில் அனைத்தையும் சொல்லி விட முடியாது. ஆர்வம் உள்ளவர்கள் தங்கள் தேடலை தொடரலாம்.


மூன்றாவது, இவற்றைச் சொல்வதன் மூலம், ஏதோ எனக்கு இதெல்லாம் தெரியும் என்று நான் சொல்லவரவில்லை. படித்ததை, கேட்டதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். இவை நான் கண்டு பிடித்தவை அல்ல. எனக்கு இவை முழுவதுமாக புரியவும் இல்லை. 


ஒவ்வொரு தத்துவத்தையும் நீங்கள் வலை தளங்களில் மேலும் விரிவாக ஆராயலாம். படிக்கப் படிக்க விரிந்து கொண்டே போகும். அவ்வளவு ஆழமும், அகலும், நுண்மையும் கொண்டவை. 


இனி இந்த மெய்யியலின் ஒரு பகுதியான 3 6 தத்துவங்களுள் நுழைவோம். 



No comments:

Post a Comment