கம்ப இராமாயணம் - இராமனின் சகோதர சோகம்
இந்திரஜித்தின் அம்பினால் இலக்குவன் அடிபட்டு மூர்ச்சையாகிக் கிடக்கிறான்.
அவன் இறந்து விட்டானோ என்று எண்ணி, இராமன் புலம்புகிறான்.
"என் தந்தை தசரதன் இறந்தான்,
இந்த உலகம் எல்லாம் ஆளும் அரசுரிமையை தந்தேன்,
அப்போது எல்லாம் நீ என்னுடன் இருக்கிறாய் என்ற தைரியத்தில் இருந்தேன்.
இப்போது நீ போய் விட்டாய்.
என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறேன்.
நான் இனிமேல் உயிரோடு இருக்க மாட்டேன்...நானும் உன்னோடு வந்து விடுகிறேன்" என்று கதறுகிறான் இராமன்.
நெஞ்சை உருக்கும் சோகம்.
எந்தை இறந்தான் என்றும் இருந்தேன்; உலகு எல்லாம்
தந்தனென் என்னும் கொள்கை தவிர்ந்தேன்; தனி அல்லேன்
உய்ந்தும் இருந்தாய் நீ என நின்றேன்; உரை காணேன்
வந்தனென் ஐயா! வந்தனென் ஐயா! இனி வாழேன்
எந்தை = என் தந்தை (தசரதன்)
இறந்தான் = இறந்த பின்னும்
என்றும் இருந்தேன்; = நான் (உயிரோடு) இருந்தேன்
உலகு எல்லாம் = இந்த உலகம் எல்லாம்
தந்தனென் = தந்தேன்
என்னும் கொள்கை தவிர்ந்தேன்; = அதை பற்றி கூட நினைக்கவில்லை
தனி அல்லேன் = நான் தனி ஆள் அல்லேன் என்று நினைத்து இருந்தேன்
உய்ந்தும் = பிழைத்தும் இருந்தேன்
இருந்தாய் நீ என நின்றேன்; = நீ என் கூட இருந்தாய் என்று இருந்தேன்
உரை காணேன் = இதற்க்கு (நீ இப்படி இறந்து கிடப்பதற்கு) அர்த்தம் தெரியவில்லை
வந்தனென் ஐயா! = நானும் வருகிறேன் உன்னோடு
வந்தனென் ஐயா! = நானும் உன்னோடு வருகிறேன்
இனி வாழேன் = இனி நான் உயிர் வாழ மாட்டேன்
(Appeal: If you like this blog, please click g+1 below to express your likining)
நன்றி.
ReplyDelete