குற்றாலக் குறவஞ்சி - நடனமாடும் தமிழ்
திருக் குற்றாலக் குறவஞ்சி பிற்காலத் தமிழ் இலக்கியத்தில் உள்ள ஒரு இனிய பாடல் தொகுப்பு.
பக்தியும், காதலும், சிருங்காரமும், நகைச்சுவையும் சேர்ந்து இனிய சந்தத்தில் அமைந்த பாடல்கள்.
இராகம் போட்டுப் பாடலாம்.
சில பாடல்களில் பெண்களைப் பற்றிய வர்ணனை சற்று தூக்கலாகவே இருக்கும்.
ஜொள்ளர்களுக்கு நல்ல விருந்து.
குற்றாலத்தில் உள்ள சிவனை பாடல் நாயாகனாக கொண்டு எழுதப் பட்ட பாடல்கள்.
அதில் இருந்து ஒரு இனிய பாடல்....
செங்கையில் வண்டு கலின்கலி னென்று செயஞ்செயம்
என்றாட - இடை
சங்கத மென்று சிலம்பு புலம்பொடு தண்டை
கலந்தாட - இரு
கொங்கை கொடும்பகை வென்றன மென்று குழைந்து
குழைந்தாட - மலர்ப்
பைங்கொடி நங்கை வசந்த சவுந்தரி
பந்து பயின்றாளே.
ரொம்ப ரொம்ப எளிமையான பாடல்.
வசந்த சௌந்தரி பந்து விளையாடியதைப் பற்றிய பாடல்.
சற்று வேகமாகப் படித்தால் பந்து துள்ளுவது போல் பாடல் வரிகள் துள்ளும்...
இந்தப் பாடலுக்கு ஏன் உரை எழுதவில்லை?
ReplyDeleteஇந்தச் சந்தம், ஒரு தமிழ் படப்பாடல் போல இருக்கிறது. தொடக்கம் சட்டென்று மறந்து விட்டது. அது டி.எம்.எஎஸ். பாடியது. அபிராமி பட்டர் பாடுவது போல் அமைந்தது. "எழுந்து வாராயோ?" என்று முடியும். நினைவுக்கு வருகிறதா?
You are absolutely right. The context and song were bang on...good memory..:)
Deleteசொல்லடி அபிராமி - பாடல்
ReplyDelete