குறுந்தொகை - காணமல் போன காதலன்
அவள், அவளுடைய காதலனை சில நாட்கள் காணாமல் வருந்துகிறாள்.
சங்க காலம் என்பது இப்ப உள்ளது மாதிரியா ?
செல் போன், லேன்ட் லைன், இ- மெயில் எல்லாம் இல்லாத காலம்.
ஒரு வேளை அவனுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டு இருக்குமோ என்று அஞ்சுகிறாள்.
இல்ல, தன்னை மறந்து வேறு யாருடனோ சென்றிருப்பானோ என்று சந்தேகம் கொள்கிறாள்.
தன் பயத்தை, சந்தேகத்தை தன் தோழியிடம் சொல்லுகிறாள்.
தோழி ரொம்ப practical and bold . ஒண்ணும் பயப்படாதடி, எங்க போயிருவான் உன் ஆளு...
தரைய கீறி பூமிக்குள்ளா போயிருவானா, இல்ல வானத்துல ஏறி பரந்துருவானா, இல்ல தண்ணி மேல நடந்து எங்காவது போயிருவானா ? ஊர் ஊரா, வீடு வீடு போய் தேடி கண்டு பிடிச்சு கொண்டு வர்றேன் பாரு என்று அவளுக்கு ஆறுதல் சொல்லுகிறாள் தோழி...
அந்த குறுந்தொகைப் பாடல்...
நிலந்தொட்டுப் புகாஅர் வான மேறார்
விலங்கிரு முந்நீர் காலிற் செல்லார் நாட்டி னாட்டி னூரி னூரிற்
குடிமுறை குடிமுறை தேரிற்
கெடுநரு முளரோநங் காத லோரே.
பதம் பிரிக்காம முடியாது...
நிலம் தொட்டு புகார், வானம் ஏரார்
விலங்கு இரு முந்நீர் காலில் செல்லார்
நாட்டில் நாட்டில் ஊரில் ஊரில்
குடி முறை குடி முறை தேறின்
கெடுநரும் உளரோ நம் காதலோரே
நிலம் தொட்டு புகார் = நிலத்தி கீறி உள்ளே போக மாட்டான்
வானம் ஏரார் = வானத்துல ஏறி பறந்து போக மாட்டான்
விலங்கு இரு முந்நீர் = ஆற்று நீர், ஊற்று நீர், மழை நீர் என்ற மூன்று நீரும்
சேர்ந்த கடல் மேல்
காலில் செல்லார் = காலால் நடந்து சென்றிருக்க மாட்டான்
நாட்டில் நாட்டில் = ஒவ்வொரு நாடாக
ஊரில் ஊரில் = ஒவ்வொரு ஊராக
குடி முறை குடி முறை = வீடு வீடாக
தேறின் = தேடினால்
கெடுநரும் உளரோ = கிடைக்காமல் போவாரும் உள்ளாரோ?
நம் காதலோரே = உன்னுடைய காதலனும் அப்படி தேடினால் கிடைப்பான்
சும்மா பிடணியிலே அடிச்ச மாதிரி ஒரு பேச்சு!
ReplyDelete