திரி கடுகம் - சிறந்த செல்வங்கள்
திரி கடுகம் என்ற பதினெண் கீழ்கணக்கு நூல்,வாழ்க்கைக்கு உபயோகமான கருத்துக்களை சொல்கிறது.
ஒவ்வொரு பாட்டிலும் மூன்று விஷயங்கள் இருக்கும்.
திரி கடுகம் என்றால் சுக்கு, மிளகு, திப்பிலி என்ற மூன்ற ஆயுர்வேதப் பொருள்கள்.
எப்படி அவை உடலுக்கு நன்மை செய்கின்றதோ, அதுபோல, இந்தப் பாடல்களில் இடம் பெரும் மூன்று செய்திகள் நம் வாழ்க்கைக்கு உதவி செய்யும்.
சிறந்த செல்வங்கள் மூன்று என திரிகடுகம் கீழ் கண்டவற்றை கூறுகிறது....
பிறர்தன்னைப் பேணுங்கால் நாணலும் பேணார்
திறன்வேறு கூறிற் பொறையும் - அறவினையைக்
காரண்மை போல வொழுகுதலும் இம்மூன்றும்
ஊராண்மை யென்னுஞ் செருக்கு.
பிறர் = மற்றவர்கள்
தன்னைப் பேணுங்கால் = நம்மை புகழும் போது
நாணலும் = வெட்கப் படுதலும்
பேணார் = நம்மை பற்றி உயர்ந்த அபிப்பிராயம் இல்லாதவர்கள்
திறன்வேறு கூறிற் = நம்மை பற்றி பழித்து கூறும் போது
பொறையும் = பொறுத்துக் கொள்ளுதலும்
அறவினையைக் = அறம் + வினை = தர்மம் செய்தலை
காரண்மை = கார் + ஆண்மை = கார் என்றால் மேகம், ஆண்மை என்றால் செலுத்துதல், வழி நடத்துதல்.
போல வொழுகுதலும் = அது போல இருத்தலும். கொடுக்கும் போது மேகம் போல் பலன் கருதாமல் கொடுத்தலும்
இம்மூன்றும் = இந்த மூன்றும்
ஊராண்மை யென்னுஞ் செருக்கு = ஊர் + ஆண்மை + என்னும் + செருக்கு
செருக்கு என்றால் செல்வம்.
ஆண்மை என்னும் செருக்கு என்றால் ஆண்மை என்கின்ற செல்வம்
ஊர் என்றால் இந்த இடத்தில் செல்லுகின்ற இடம் என்று பொருள் கொள்ளலாம். மற்றவர்கள் சென்று அடைய விருப்பும் சிறந்த செல்வம்.
நல்ல மூன்று விஷயங்கள்தான்.
ReplyDelete