Sunday, July 1, 2012

திருஅருட்பா - இறைவா இது உனக்கு சம்மதமா?


திருஅருட்பா - இறைவா இது உனக்கு சம்மதமா?


வள்ளலார் இறைவனிடம் சண்டை போடுகிறார். நீதி கேட்கிறார்.

"நீ எனக்கு அருள் புரியாமல் இருப்பது எந்த விதத்தில் நியாயம்" என்று முறையிடுகிறார்.






வாழையடி வாழையென வந்த திருக் கூட்ட
மரபினில் யான ஒருவன் அன்றோ வகை யறியேன் இந்த 
எழைபடும் போடு உனக்குத் திருவுளச சம்மதமோ 
இது தகுமோ இது முறையோ இது தருமந்தானோ 
மாழை மணிப பொதுவில் நடஞ்செய் வள்ளால் யான் உமக்கு 
மகன் அலனோநீ எனக்கு வாய்த்த தந்தை யலையோ
கோழை உலக உயிர்த் துயரம் இனிப பொறுக்க மாட்டேன் 
கொடுத்தருள் நின அருள் ஒளியைக் கொடுத்தருள் இப்பொழுதே .!



வாழையடி வாழையென = வழி வழியாக

வந்த திருக் கூட்ட = வந்த பக்தர்களின்

மரபினில் = மரபினில்

யான ஒருவன் அன்றோ = நானும் ஒருவன் அல்லவா?

வகை யறியேன் = ஒரு வழியும் அறியேன்

இந்த எழைபடும் பாடு = ஏழையான நான் படும் பாடு

உனக்குத் = இறைவா உனக்கு

திருவுளச சம்மதமோ = திருவுளம் சம்மதமோ?

இது தகுமோ = இது தகுமா?

இது முறையோ = இது முறையா?

இது தருமந்தானோ = இது தருமமா?

மாழை மணிப பொதுவில் = அம்பலத்தில், பொதுவில்

நடஞ்செய் வள்ளால் = நடனம் ஆடும் வள்ளலே

யான் உமக்கு = நான் உனக்கு

மகன் அலனோ = மகன் அல்லவா?

நீ எனக்கு வாய்த்த தந்தை யலையோ = நீ என் தந்தை அல்லவா?

கோழை = கோழையான நான்

உலக உயிர்த் துயரம் = இந்த உலகத் துயரம்

இனிப பொறுக்க மாட்டேன் = இனி பொறுக்க மாட்டேன்

கொடுத்தருள் = கொடுத்து அருள்

நின் அருள் ஒளியைக் = நின் அருள் ஒளியை

கொடுத்தருள் இப்பொழுதே .! = கொடுத்தருள் இப்பொழுதே

No comments:

Post a Comment