Wednesday, July 18, 2012

பழமொழி - விருதுபட்டி சனியனை விலை கொடுத்து வாங்கலாமா ?


பழமொழி - விருதுபட்டி சனியனை விலை கொடுத்து வாங்கலாமா ?


நாம் பொருள் செலவழித்து நிறைய விஷயங்களை பெறுகிறோம் - படிப்பு, புத்தகங்கள், சினிமா, club , வெளி இடங்களை சுற்றிப் பார்த்தல், தொலைக்காட்சி,  இத்யாதி, இத்யாதி....

இவற்றால் நமக்கு என்ன பலன்  ? இவை நமக்கு நன்மை தருமா ? அல்லது இவற்றால் நமக்கு தீமையா ? தீமை என்றால் அதை விடுவது அல்லவா புத்திசாலித்தனம்?

பொருள் கொடுத்து இருள் வாங்குவதை பற்றிப் பேசுகிறது இந்த பாடல்...

விளக்கு விலை கொடுத்துக் கோடல், விளக்குத்
துளக்கம் இன்று என்று அனைத்தும் தூக்கி; விளக்கு
மருள் படுவது ஆயின்,-மலை நாட!-என்னை?
பொருள் கொடுத்துக் கொள்ளார், இருள்.

விளக்கு = விளக்கு. இங்கு விளக்கு என்றால் வெறும் விளக்கு மட்டும் அல்ல, நம் அறியாமை இருளை போக்கும் எதுவும் விளக்கு என்று கொள்ள வேண்டும்

விலை கொடுத்துக் கோடல், = விலை கொடுத்து வாங்குவது (கோடல் = கொள்ளுதல்)

விளக்குத் = அந்த விளக்கு

துளக்கம் இன்று = குழப்பம் இன்றி

என்று அனைத்தும் தூக்கி; =எல்லாவற்றையும் தெளிவாக விளக்கி 
கொள்ளும் பொருட்டு

விளக்கு = ஆனால், அந்த விளக்கே 

மருள் படுவது ஆயின்,- = குழப்பத்தை தருவதாயின்

மலை நாட!- = மலை நாட்டவனே

என்னை? = யாரவது ?

பொருள் கொடுத்துக் கொள்ளார், இருள். = பொருள் கொடுத்து இருள் கொள்வார்களா ?

அடுத்த முறை கோகோ கோலா, பெப்சி, finger  chips சாப்பிடும் போதும், cigarette வாங்கும் போதும் இந்த பாடலை நினைத்து பார்ப்போம்...

   

No comments:

Post a Comment