தனிப் பாடல் - அறம் பொருள் இன்பம்
அறம் பொருள் இன்பம் இந்த மூன்றையும் மிக எளிய முறையில் ஔவையார் விளக்குகிறார்
ஈதல் அறம் தீவினைவிட்டு ஈட்டல்பொருள் எஞ்ஞான்றும்
காதல் இருவர் கருத்து ஒருமித்து - ஆதரவு
பட்டதே இன்பம் பரனை நினைந்து இம்மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு. -
ஈதல் அறம் = மற்றவர்களுக்கு தருவது அறம்
தீவினைவிட்டு ஈட்டல்பொருள் = தீய வழிகளை தவிர்த்து, நல்ல வழியில் உழைத்து சேர்ப்பது பொருள்
எஞ்ஞான்றும் = எப்போதும்
காதல் இருவர் = காதலர் இருவர் (கணவன் மனைவி என்று சொல்லவில்லை)
கருத்து ஒருமித்து = ஒத்த கருத்துடன் (சண்டை போடாமல், வேண்டா வெறுப்பாகச் செய்யாமல்)
ஆதரவு பட்டதே இன்பம் = ஒருவருக்கு ஒருவர் துணையாக இருந்து ஆதரவு தருவதே இன்பம்
பரனை நினைந்து = இறைவனை நினைத்து
இம்மூன்றும் = இந்த மூன்றையும் (பேரின்பம் அடைய வேண்டும் என்ற எண்ணத்தையும் சேர்த்து)
விட்டதே பேரின்ப வீடு. - = விடுவதே பெரிய இன்பம், வீடு பேறு
ஔவையாரின் அருமையான வெண்பாவை சரியான முறையில் சீர் பிரித்துப் போடாமல் தவறாகப் பதிந்திருப்பது வருத்தமளிக்கிறது! சரியான பாடல் கீழே!
ReplyDeleteஇருவிகற்ப நேரிசை வெண்பா
ஈதலறம் தீவினைவிட்(டு) ஈட்ட(ல்)பொருள் எஞ்ஞான்றும்
காதல் இருவர் கருத்தொருமித்(து) - ஆதரவு
பட்டதே இன்பம் பரனைநினைந்(து) இம்மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு!
- ஔவையார்