கம்ப இராமாயணம் - கற்பு என்றால் கல்வியா ?
முந்திய Blog இல் "கற்பழிக்க திருவுள்ளமே" என்ற திரு ஞானசம்பந்தரின் பாடல் வரிகளில் கற்பு என்பதற்கு கல்வி என்று ஒரு பொருளும் உண்டு என்று பார்த்தோம்.
அந்த பொருளில் வேறு எங்காவது அதை உபயோகப் படுத்தி இருக்கிறார்களா ?
கம்ப இராமாயணத்தில் ஒரு இடம்.
இராமனும், இலக்குவனும் கிட்கிந்தா மலை மேல் வருகிறார்கள்.
தூரத்தில் இருந்து அனுமன் பார்க்கிறான்.
இவர்களைப் பார்த்தால் போர் செய்வதை தொழிலாகக் கொண்டவர் போல் இருக்கிறது, ஆனால் அவர்கள் மேனியோ தவ புரியும் முனிவர்கள் போல் இருக்கிறது, கையிலோ வில் இருக்கிறது, என்று மனம் குழம்பி, மறைந்து நின்று, தன் அறிவால் ஆராய்ந்து பார்த்தான்.
இங்கு கற்பு என்பது "கல்வி", "அறிவு", "ஞானம்" என்ற பொருளில் வருகிறது.
பாடல்
அஞ்சனைக்கு ஒரு சிறுவன், அஞ்சனக் கிரி அனைய
மஞ்சனைக் குறுகி, ஒரு மாணவப் படிவமொடு,
வெஞ் சமத் தொழிலர், தவ மெய்யர், கைச் சிலையர்' என,
நெஞ்சு அயிர்த்து, அயல் மறைய நின்று, கற்பினின் நினையும்
பொருள்
அஞ்சனைக்கு ஒரு சிறுவன், = அஞ்சனா தேவியின் மைந்தன்
அஞ்சனக் கிரி அனைய = கரிய மலை போன்ற உருவம் கொண்டவன்
மஞ்சனைக் குறுகி, = மைந்தனை என்பது மஞ்சனை என்று மருவியது. மைந்தனை அணுகி
ஒரு மாணவப் படிவமொடு, = ஒரு மாணவனின் உருவத்தோடு
வெஞ் சமத் தொழிலர், = (சமர் = போர்) பார்த்தால் போர் தொழில் செய்பவர் போல் இருக்கிறது
தவ மெய்யர், = அவர்களின் உடலோ தவம் செய்பவர்களைப் போல் இருக்கிறது
கைச் சிலையர்' = கையில் வில் வைத்து இருக்கிறார்கள்
என, = என்று
நெஞ்சு அயிர்த்து, மனதில் ஐயம் கொண்டு
அயல் மறைய நின்று, = தூரத்தில் மறைந்து நின்று
கற்பினின் நினையும் = அறிவால் நினைத்துப் பார்த்தான்
Convinced ?
No comments:
Post a Comment