Wednesday, November 28, 2012

சித்தர் பாடல்கள் - சலிப்பு


சித்தர் பாடல்கள் - சலிப்பு


பட்டினத்தார் பாடல்கள் நிலையாமையின் உச்சம். பாடல்களின் ஆற்றொழுக்கான நடை, ஒரு தரம் படித்தாலே மனதில் ஒட்டிக்கொள்ளும் அதன் எளிமை, வாழ்க்கை இவ்வளவுதானா, இதற்குத்தானா இத்தனை அடி தடி, சண்டை சச்சரவு என்று நம் ஆணவத்தின் தலையில் குட்டும் பாடல்கள்...

இருப்பையூரில் வாழும் சிவனே, நான் எத்தனை முறை தான் பிறப்பேன் ? என்னை பெற்று பெற்று தாயார்களும் உடல் சலித்து விட்டார்கள். ஒவ்வொரு பிறவியிலும் உண்மையை தேடி தேடி கால் சலித்து விட்டேன். ஒவ்வொரு முறையும் என் தலை எழுத்தை எழுதி எழுதி பிரமனும் கை சலித்து விட்டான். போதுமப்பா...மீண்டும் ஒரு கருப்பையில் வரமால் என்னை காப்பாற்று....

பாடல் 


மாதா உடல் சலித்தாள் வல்வினையேன் கால்சலித்தேன்
வேதாவும் கைசலித்து விட்டானே - நாதா
இருப்பையூர் வாழ்சிவனே இன்னுமோர் அன்னை
கருப்பையிலே வாராமற் கா’

பொருள் 

மாதா = அன்னையரும்

உடல் சலித்தாள் = என்னை பெற்று பெற்று உடல் சலித்து விட்டார்கள்


வல்வினையேன் = கொடிய வினையை உடைய நான்

கால்சலித்தேன் = கால் சலித்து விட்டேன்

வேதாவும் = வேதத்திற்கு அதிபதியான பிரம்மனும்

கைசலித்து விட்டானே = என் தலை எழுத்தை எழுதி எழுதி கை சலித்து விட்டான்

 நாதா = நாதனே

இருப்பையூர் = இருப்பையூர் என்ற ஊரில்

வாழ்சிவனே = வாழ்கின்ற சிவனே (வாழ்ந்த, வாழுகின்ற, வாழும் சிவன்)

இன்னுமோர் அன்னை = மீண்டும் ஒரு அன்னை

கருப்பையிலே = கருப் பையிலே 

வாராமற் கா = வாராமல் என்னை காப்பாயாக

6 comments:

  1. Awesome simple explanation. Hats off.
    Dr V Prabu.

    ReplyDelete
  2. மிக்க நன்ரி

    ReplyDelete
  3. நிஷ்கர்மம்

    ReplyDelete
  4. இந்த பாடல் பட்டினத்தார் பாடல் தான் என்று உறுதி செய்ய என்ன வழி அல்லது உபாயம்

    ReplyDelete
  5. இருப்பையூர் அல்ல..இழுப்பையூர் என்பதே சரி..முற்காலத்தில் இவ்வூருக்கு மதுகவனம் என்ற பெயரும் உண்டு.இழுப்பையூர் என்ற பெயர் மருவி இலுப்பூர் என்றானது.. புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ளது.. புதுக்கோட்டையிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் மணப்பாறை சாலையில் அமைந்துள்ளது..

    ReplyDelete