Friday, July 12, 2013

புற நானூறு - உயர்ந்ததும் இழிந்ததும்

புற நானூறு - உயர்ந்ததும் இழிந்ததும் 



உலகிலேயே மிக அற்பமான செயல் ஒருவரிடம் சென்று யாசகம் கேட்பது. அதை விட அற்பமானது ஒன்று இருக்கிறது. இலட்சக் கணக்கில், கோடிக் கணக்கில் பணத்தை சேர்த்து வைத்துக் கொண்டு, பசிக்கிறது என்று யாசகம் கேட்டு வருபவனுக்கு ஒன்றும் கொடுக்க மாட்டேன் என்று சொல்லுவது, பிச்சை எடுப்பதை விட கேவலமானது. சில்லறை இல்லை அந்தப் பக்கம் போய் கேளு என்று வயதான பாட்டியை, கை இல்லாத பிச்சை காரனை விரட்டுவது, அந்த பிச்சை எடுப்பதை விட கேவலம்.

உண்மைதானே. அவனிடம் இல்லை. உதவி கேட்க்கிறான். வைத்துக் கொண்டு பொய் சொல்லுவது உயர்ந்ததா தாழ்ந்ததா ?

கேட்காமலே ஒருவருக்கு வலிய சென்று உதவி செய்வது உயர்ந்தது. அதைவிட உயர்ந்தது எது என்றால், அப்படி தந்த உதவியை வேண்டாம் என்று சொல்லுவது.

அப்படிச் சொன்னவர் திருநாவுக்கரசர்.

கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி
வீடும் வேண்டா விறவின் விளங்கினார்

அப்படி எல்லாம் வாழ்ந்த பரம்பரை நம் பரம்பரை.



ஈயென இரத்தல் இழிந்தன்று அதனெதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று
கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்று அதனெதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று

என்பது புறநானூற்றுப் பாடல்.

இதைப் பாடியவர் கழை தின் யானையார் என்ற புலவர்


2 comments:

  1. பாடல் நன்று. அதைவிட, புலவர் பெயர் இன்னும் சுவையாக இருக்கிறது. அவருக்கு ஏன் அப்படிப் பெயர் வந்ததோ?

    ReplyDelete
    Replies
    1. அது அவர் பெயரல்ல. அவர் பயன்படுத்திய ஒரு சொல்லாடல். அவர் பெயர் த்ரியாத காரணத்தால் அதுவே பெயராயிற்று.

      Delete