ஜடாயு - ஒரு அறிமுகம்
இராமாயணத்தில் பல கிளைக் கதைகள், பல சிறு பாத்திரங்கள் வந்து போவது உண்டு.
அந்த கதா பாத்திரங்கள் இல்லை என்றால் கதையின் போக்கு ஒன்றும் மாறிப் போய் விடாது.
பின் எதற்கு அந்த கதா பாத்திரங்கள் ?
குகன் அந்த மாதிரி ஒரு பாத்திரம்.
ஜடாயு இன்னொரு பாத்திரம்.
பிரகலாதன் மற்றொரு பாத்திரம்.
இந்த கதா பாத்திரங்கள் ஏதோ ஒன்றை சொல்லாமல் சொல்லிப் போகிறார்கள்.
அவர்கள் மூலம் வால்மீகியும் கம்பனும் ஏதோ சொல்ல வருகிறார்கள். நேரடியாகச் சொல்லவில்லை....அந்த கதா பாத்திரங்களின் செயல் மூலம் ஏதோ ஒன்றை உணர்த்துகிறார்கள். அது என்ன ?
ஜடாயு !
வயதான கருடன்.
இராவணன் சீதையை தூக்கிக் கொண்டு போகிறான். ஜடாயு வழி மறிக்கிறான். இராவணனோடு போரிட்டு விழுகிறான் . பின் இராம இலக்குவனர்களை சந்தித்து நடந்தவற்றை கூறி, முழுதும் அல்ல, உயிரை விடுகிறான்.
இராமன் ஜடாயுவுக்கு இறுதிக் கடன் செய்கிறான்.
கதை அவ்வளவுதான்.
இதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய தத்துவங்களை சொல்லிப் போகிறான் கம்பன்.
வாழ்க்கை நெறி சொல்ல வந்தது இந்த கதை.
சமுதாயப் புரட்சிக்கு வித்திட்டது இந்த கதை.
அது என்ன என்று பார்ப்போமா ?
ஜடாயு என்று கி. ராவின் சிறுகதை ஒன்றை வாசித்திருக்கிறேன் ... இதே போன்ற ஒரு கதை தான்.. அதுவும் அருமையான சிறுகதை
ReplyDeleteமதி அவர்கள் குறிப்பிட்ட கதை எனக்கும் மிகப் பிடித்த ஒன்று. அதைப் படித்துவிட்டு, நானும் என் நண்பனும், கி.ரா.வுக்குக் கடிதம் எழுதியதும், அவர் பதிலும் இனிய இளமை நினைவுகள். இன்னும் என்னிடம் அந்தக் கடிதம் இருக்கிறது - அதுவே ஒரு அருமையான கட்டுரை மாதிரி இருக்கும்!
ReplyDelete