ஜடாயு - வில் இட்டு உயர்ந்த நெடு மேகம்
இலக்கியங்கள் நம் கற்பனையின் எல்லைகளை மிக மிக விரிவுபடுத்கின்றன. நாம் சிந்திக்க முடியாத அளவுக்கு நம் கற்பனையை விரிவாக்குகின்றன.
இறை என்ற சக்தி நம் கற்பனைக்கு எட்டாதது.
எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி என்பார் மணிவாசகர்.
நம் அறிவு என்பது நம் உணர்வுக்கு உட்பட்டது. நாம் உணராத ஒன்றைப் பற்றி நமக்கு எந்த அறிவும் கிடையாது. கண் இல்லாதவனுக்கு நிறம் பற்றிய அறிவு இருக்காது.
நாம் , நம் புலன்களின் எல்லைகளை கருவிகளின் துணை கொண்டு விரிவாக்கலாம். ஒரு தொலை நோக்கியின் உதவியால் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள பொருகளை பார்க்க முடியும். இப்படியே புதுப் புது கருவிகள் நம் புலன்களின் எல்லைகளை பெரிதாக்குகின்றன.
மனம் என்ற கருவியின் எல்லையை எப்படி விரிவாக்குவது.
கற்பனை தான் நம் மன எல்லைகளை விரிவாக்கும் கருவி.
எப்படி கற்பனையை விரிப்பது ?
இராமாயணம் போன்ற காப்பியங்கள் நம் கற்பனையை விரிவாக்க உதவுகின்றன
வானவில் பாத்து இருகிறீர்களா ? மழை நேரத்தில் வான வில் தெரியும். கம்பன் சொல்கிறான்,
அந்த வானவில்லை மேகங்கள் தூக்கி வந்ததாக கற்பனை பண்ணுகிறார் . அது எப்படி இருக்கிறது என்றால் இராவணனின் வில்லை ஜடாயு வானில் தூக்கிக் கொண்டு பரந்த மாதிரி இருந்ததாம்.
வானவில் மாதிரி இராவணணின் பெரிய வில்.
மேகம் பறப்பது மாதிரி பறக்கும் ஜடாயு
பாடல்
எல் இட்ட வெள்ளிக் கயிலைப்
பொருப்பு, ஈசனோடும்
மல் இட்ட தோளால் எடுத்தான்
சிலை வாயின் வாங்கி,
வில் இட்டு உயர்ந்த நெடு மேகம்
எனப் பொலிந்தான்-
சொல் இட்டு அவன் தோள் வலி,
யார் உளர், சொல்ல வல்லார்?
பொருள்
எல் இட்ட = ஒளி பொருந்திய
வெள்ளிக் கயிலைப் பொருப்பு = வெள்ளி போன்ற வெண்மையான கைலாய மலையை
ஈசனோடும் = சிவனோடு
மல் இட்ட தோளால் எடுத்தான் = தன்னுடைய வலிமை பொருந்திய தோள்களால் எடுத்தான் (இராவணன்)
சிலை வாயின் வாங்கி = அவனுடைய வில்லை வாயில் வாங்கி
வில் இட்டு உயர்ந்த நெடு மேகம் = வானவில்லை கொண்டு வரும் வெண் மேகம் போல
எனப் பொலிந்தான் = என்று விளங்கினான்
சொல் இட்டு = சொற்களை கொண்டு
அவன் தோள் வலி = அவனுடைய தோள் வலியை
யார் உளர், சொல்ல வல்லார்? = யார் இருக்கிறார்கள்,எடுத்துச் சொல்ல
கற்பனை விரிந்து விரிந்து ஒரு நாள் கற்பனைக்கு அப்பால் உள்ள ஒன்றையும் நாம் அறிவோமோ ?
கம்பராலேயே சொல்ல முடிய வில்லை என்றால் என்ன சொல்வது?
ReplyDeleteஎன்ன ஒரு இனிமையான, பொருத்தமான கற்பனை! இதை எழுதிவிட்டு, "சொல்லால் யாரால் சொல்ல முடியும்" என்கிறார்!
ReplyDelete