நாலடியார் - ஏமாந்த மீன் கொத்தி பறவை
அவளின் கண்களை மீன் என்று எண்ணி கொத்தி தின்ன முயன்றது மீன் கொத்திப் பறவை.
கண்கயல் என்னுங் கருத்தினால் காதலி
பின்சென்றது அம்ம சிறுசிரல்; -பின்சென்றும்
ஊக்கி யெழுந்தும் எறிகல்லா ஒண்புருவங்
கோட்டிய வில்வாக் கறிந்து.
கண்கயல் = கண்களை கயல் (மீன்)
என்னுங் கருத்தினால் = என்று நினைத்து
காதலி = என் காதலியின்
பின்சென்றது = பின்னால் சென்றது
அம்ம சிறுசிரல் = அந்த சிறு சிரல் என்ற மீன் கொத்தி பறவை
பின்சென்றும் = பின்னால் போய்
ஊக்கி யெழுந்தும் = ஆர்வத்தோடு முயன்றும்
எறிகல்லா = அந்த கண் மீனை கொத்த முடியவில்லை
ஒண்புருவங் = ஒளி பொருந்திய புருவங்கள்
கோட்டிய = வளைந்த
வில்வாக் கறிந்து = வில்லென்று அறிந்து
நம்ம ஆளுங்க கற்பனைக்கே ஒரு எல்லையே இல்லை.
ReplyDelete