Monday, June 4, 2012

கம்ப இராமாயணம் - தவம் செய்த தவம்


கம்ப இராமாயணம் - தவம் செய்த தவம்


சூர்பனகை இராமனை முதன் முதலாகப் பார்க்கிறாள்.

அங்கே கம்பன் சூர்பனகை வாயிலாக இராமனின் சிறப்புகளை பாடுகிறான்.

இராமனின் வடிவழகை நோக்கினாள்.

சிறந்த உருவம்.

ஆனால் தவ வேடம்.

இந்த இராமன் தவம் செய்ய - அந்த தவம், என்ன தவம் செய்ததோ என்று வியக்கிறாள்.


எவன் செய, இனிய இவ் அழகை எய்தினோன்? 
அவம் செயத் திரு உடம்பு அலச நோற்கின்றான்; 
நவம் செயத்தகைய இந் நளின நாட்டத்தான் 
தவம் செய, தவம் செய்த தவம் என்?' என்கின்றாள்.


எவன் செய = எதை செய்ய ? என்ன வேண்டி?

இனிய = இனிமையான

இவ்அழகை = இந்த அழகைப்

எய்தினோன்? = பெற்றவன்

அவம் செயத் = கஷ்டப்பட்டு

திரு உடம்பு = தன்னுடைய சிறந்த உடல்

அலச நோற்கின்றான்; = வருந்தும்படி நோன்பு நோர்க்கின்றான்

நவம் செயத்தகைய = புதுமையானவற்றை செய்யத் தக்க

இந் நளின நாட்டத்தான் = இந்த நளினமான தோற்றத்தை உடையவன்

தவம் செய = தவம் செய்ய

தவம் செய்த தவம் என்?' = அந்த தவம் என்ன தவம் செய்ததோ

என்கின்றாள். = என்கிறாள்


இராமன் தவம் செய்ய, அந்த தவமே தவம் செய்ய வேண்டும்.

கம்பன் வார்த்தைகளில் விளையாடுகிறான்

1 comment:

  1. சும்மா பின்னிட்டாரு!

    ReplyDelete