திருக்குறள் - காதலா ? நாணமா ?
இன்னைக்கு அவன் கிட்ட சொல்லிரலாமா நம்ம காதலை ?
எப்படி சொல்றது ? நேரா போய் "நான் உன்னை காதலிக்கிறேன்" அப்படினா ?
சீ... சீ ... அது ரொம்ப அசிங்கம். அவன் என்னை பத்தி என்ன நினைப்பான்?
பின்ன சொல்லாமையே இருந்திரலாமா ?
அது சரிப் படாது...சொல்லிற வேண்டியது தான்...
ஆனா...ரொம்ப வெட்கமா இருக்கு...ஒரு பொண்ணு போய் எப்படி சொல்ல முடியும்...
சரி அவனா கண்டு பிடிச்சு கேட்டா சொல்லிக்கலாம்...
ஒரு வேளை அவன் கண்டுக்கவே இல்லைனா ?
.................................
ஐயோ, இந்த காதலுக்கும் நாணத்துக்கும் நடுவில் நான் கிடந்து படும் பாடு இருக்கே...போதும்டா சாமி....
காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேன்இவ் விரண்டு.
காமம் விடு = ஒண்ணு காதலை விடு
ஒன்றோ = இல்லேன்னா
நாண்விடு = நாணத்தை விடு
நன்னெஞ்சே = என்னுடைய நல்ல நெஞ்சே
யானோ பொறேன் = என்னால பொறுக்க முடியாது
இவ் விரண்டு = இந்த இரண்டையும் (காதலையும் நாணத்தையும்)
அருமையான பாடல். நன்றி.
ReplyDelete